இன்றைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தில் உள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளவும் அவற்றை அந்த ஸ்மார்ட் போன் மூலமே மிக இலகுவாக கண்டுகளிக்கவும் முடிகிறது.

பேஸ்புக் யூடியூப் வீடியோ தரவிறக்க


இருப்பினும் நாம் பேஸ்புக் யூடியூப் போன்ற தளங்களுக்கான உத்தியோகபூர்வ செயலிகளை பயன்படுத்தும் போது அவற்றில் தோன்றக்கூடிய வீடியோ கோப்புக்களை எம்மால் பார்ப்பதற்கு மட்டுமே முடிகிறது. மாறாக அவற்றை தரவிறக்கிக் கொள்ள முடிவதில்லை.

பேஸ்புக், யூடியூப் வீடியோ தரவிறக்க:

இருப்பினும் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உட்பட இன்னும் ஏராளமான தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களை ஒரே செயலியை பயன்படுத்தி தரவிறக்கிக் கொள்ள முடியும். இதற்கென எமக்கு உதவுகிறது ஸ்னேப்டியூப் எனும் செயலி

ஸ்னேப்டியூப் Snaptubeapp


இதன் பிரதான இடைமுகத்தில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெய்லிமோஷன், வைன், லைவ்லீக் போன்ற வீடியோ இணைப்புக்கள் பகிரப்படக்கூடிய பல பிரபல இணையதளங்கள் பட்டியல் படுத்தப்படுதப்பட்டுள்ளன.

அவற்றுள் நீங்கள் வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கு அதிகம் பயன்படுத்தும் இணைய தளத்தை தெரிவு செய்வதன் மூலம் அந்த தளத்தை குறிப்பிட்ட செயலியிலேயே திறந்து கொள்ள முடியும்.


பின் அந்த இணையதளத்தில் இருக்கும் எந்த ஒரு வீடியோ  கோப்பையும் இயக்கி பார்க்கவும் அதை மிக இலகுவாக உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.

மேலும் இந்த தளத்தின் ஊடாகவே பேஸ்புக் இன்ஸ்டாகிராம் தளங்களை வலம்வர முடிவதுடன் அவற்றிலுள்ள வீடியோ கோப்புக்களையும் உடனுக்குடன் தரவிறக்கிக் கொள்ள முடியும்.



நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி யூடியூப், டெய்லிமோஷன், வைன் போன்ற தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களை பார்க்கும் போது அதனை தரவிறக்கிக் கொள்வதற்கு என ஒரு அம்புக்குறியிடப்பட்ட குறியீடு குறிப்பிட்ட செயலியின் வலது கீழ் மூலையில் தோன்றும். பின் அதனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தின் ஊடாக அந்த வீடியோ கோப்பு எவ்வாறான தரத்தில் அமைய வேண்டும் என்பதை தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:



என்றாலும் நீங்கள் பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்க வேண்டும் எனின் குறிப்பிட்ட வீடியோ கோப்பு பகிரப்பட்ட நேரத்தை அடையாளப்படுத்தும் இடத்தை சுட்ட வேண்டும். (மேலே படத்தில் உள்ளவாறு)

பின்னர் குறிப்பிட்ட வீடியோ கோப்பை தரவிறக்குவதற்கான குறியீடு உங்களுக்கு தோன்றும்.

இவைகள் தவிர இதில் தரப்பட்டுள்ள Address Bar மூலமாகவே யூடியூப் வீடியோ கோப்புக்களை தேடிப்பெறவும் முடிகிறது. மேலும் நீங்கள் தரவிறக்கும் வீடியோ கோப்புக்களை இடையில் நிறுத்திக் கொள்ளவும் தேவைப்படும் போது அதனை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தரவிறக்க முடியாது. எனினும் ஸ்னேப்டியூப் (Snaptube) எனும் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட செயலியை தரவிறக்கி உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவிக்கொள்ளலாம்.

தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top