இணையத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது யூடியூப் தளம் தான்.

யூடியூப் வீடியோ தரவிறக்க (Download)


இதில் எமக்குத் தேவையான எந்த ஒரு வீடியோ கோப்பையும் மிக இலகுவாக தேடி அதனை பார்க்க முடியும்.


எனினும் இதில் இருக்ககூடிய வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்வதற்கான வசதியுயோ அல்லது அவற்றை Mp3 வடிவத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான வசதியோ யூடியூப் தளத்தில் இல்லை.

என்றாலும் பல்வேறு வழிமுறைகளில் யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளவும் அவற்றை Mp3 வடிவத்திற்கு மாற்றி தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.


அந்த வகையில் யூடியூப் தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பை நீங்கள் தரவிறக்க விரும்பினால் அல்லது அதில் வரக்கூடிய இசையை அல்லது படலை MP3 வடிவத்துக்கு மாற்றி தரவிறக்க விரும்பினால் எவ்வித மூன்றாம் நபர் செயலிகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அந்த வீடியோ கோப்பின் இணைய முகவரியில் வரும் (www.youtube.com/xxxxxxx ) ube என்பதை மாத்திரம் நீக்கிவிட்டால் போதும்.இனி அது www.yout.com/xxxxxx எனும் தளத்துக்கு மாற்றப்படும் பின்னர் அதனை உடனடியாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.தரவிறக்கும் போது MP3 வடிவத்தில் அதனை தரவிறக்க  விரும்பினால் Audio என்பதையும் அதனை வீடியோ கோப்பாகவே தரவிறக்க விரும்பினால் Video எனும் பகுதியையும் சுட்டுக. பின்னர் கீழே இருக்கும் Record என்பதை சுட்டுவதன் மூலம் அதனை தரவிறக்கிக் கொள்ள முடியும்.


மேலும் ஒரு யூடியூப் வீடியோ கோப்பில் உள்ள இசையின் அல்லது பாடலின் ஒரு பகுதியை மாத்திரம் தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதனை மேற்கொள்ள அந்த தளத்தில் தோன்றும் வீடியோ கோப்புக்குக் கீழ் உள்ள இரு பட்டன்களையும் நகர்த்துவதன் மூலம் உங்களுக்குத் தேவையான பகுதியை மாத்திரம் தெரிவு செய்துகொள்ள முடியும்.

இதன் வீடியோ இணைப்பை கீழே காணலாம்தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top