ஸ்மார்ட் போன் மூலம் புத்தம் புதிய திரைப்படங்களை பார்ப்பதற்கும் தொலைக்காட்சி சேன்னல்களை பார்பதற்கும் என இன்று ஏராளமான செயலிகள் இருக்கின்றன.அந்த வகையில் முன்னர் நாம் உங்களுக்கு ஒளிதம் எனும் செயலியை அறிமுகப்படுத்தியிருந்தோம்.


அதில் SunTv, KTV போன்ற மற்றும் பல தொலைக்காட்சி சேனல்கள் முறையாக இயங்கவில்லை என பலரும் கருத்துரை இட்டிருந்தனர்.


ஆனாலும் Japps Tube எனும் செயலியானது தடையின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்ப்பதற்கும் புதிய திரைப்படங்களை தரவிறக்கிக் கொள்வதற்கும் உதவுகிறது.

இதற்கு பின்வரும் மூன்று செயலிகளையும் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவ வேண்டும்.


1. Japps Tube செயலியை பின்வரும் இணைப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.2. பின்னர் இதில் இருக்கும் திரைப்படங்களை தரவிறக்க ES Explorer செயலியை நீங்கள் நிறுவியிருக்க வேண்டும். இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.


3. மேலும் இந்த செயலியில் தோன்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை காண்பதற்கு MX Player Pro அல்லது XMTV Player செயலியை நிறுவியிருத்தல் வேண்டும் XMTV Player செயலியை பின்வரும் இணைப்பில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.Japps Tube செயலியை பயன்படுத்துவது எப்படி?

  • திரைப்படங்களை தரவிறக்க:

1. மேற்குறிப்பிட்ட மூன்று செயலிகளையும் உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிய பின்னர் XMTV Player செயலியை நிறுவிய பின் அதனை திறந்து I Agree என்பதை சுட்டுக.

 2. பின்னர் Japps Tube செயலியை திறந்துகொள்க.3. இனி இதன் முகப்புப் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய வெவ்வேறு மொழிகளில் உள்ள அனைத்து திரைப்படங்களும் தரப்பட்டுள்ளன.4. அவற்றுள் நீங்கள் தரவிறக்க விரும்பும் திரைப்படத்தை தெரிவு செய்யும் போது தோன்றும் சாளரத்தில் ES Downloader என்பதை தெரிவு செய்க. 

அவ்வளவு தான்...  இனி குறிப்பிட்ட திரைப்படம் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கப்படும்.

  • தமிழ் தொலைகாட்சி அலைவரிசைகளை பார்க்க:


5. அதேபோல் நீங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்ப்பதற்கு இந்த செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட பட்டனை சுட்டுக.6. பின்னர் தோன்றும் சாளரத்தில் Tamil Live Channels என்பதை சுட்டுக.

இனி Sun TV, Isai Aruvi, Siripoli TV, Jaya TV, Raj TV, Zee Tamil, Chithiram TV, Shalini, IBC Tamil போன்ற பல தொலைக்காட்சி அலைவரிசைகள் இதில் தரப்பட்டுள்ளன.அவற்றுள் உங்களுக்குத் தேவையான அலைவரிசையை சுட்டிய பின் தோன்றும் சாளரத்தில்  XMTV Player என்பதை சுட்டுக. அவ்வளவுதான் இனி குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை தடையின்றி பார்க்கலாம்.

இதனை முயற்சித்துப் பார்த்ததில் எவ்வித தடைகளும் இன்றி சிறப்பாக இயங்கியது. நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.

Love to hear what you think!

1 comments:

 
Top