தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பல சுவையான மாற்றங்களை நாம் இன்று அனுபவித்து வருகிறோம்.

ஆண்ட்ராய்டு TrackIDசெயலி


தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால் புதுத் தோற்றத்துடனும் புதுப்புது வசதிகளுடனும் இன்று நமது கைகளில் வலம் வரும் ஸ்மார்ட் போன்களிலும் பல ஆச்சரியமான வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் உங்கள் சுற்றுப்புறச் சூழலில் ஒழித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடலை ஒரே நொடியில் உங்கள் ஸ்மார்ட் போனிலும் பெற்றுக்கொள்ள உதவுகிறது Track ID எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.

Track ID செயலியில் எவ்வாறான வசதிகள் தரப்பட்டுள்ள?

தமிழ் மொழி உட்பட மேலும் 60 இற்கும் மேற்பட்ட மொழிகளில் ஒலிக்கக்கூடிய பாடல்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ளவும் அவைகள் தொடர்பான முழு விபரங்களை பெற்றுகொள்ளவும் முடியும்.உங்களை சுற்றி ஒலிக்கும் ஒருபாடலை கண்டறிந்து அதனை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஸ்மார்ட் போனில் இணைய இணைப்பு செயற்படுத்தப்பட்டிருத்தல் அவசியம். என்றாலும் குறிப்பிட்ட ஒரு பாடல் ஒலிக்கும் இடத்தில் இணைய இணைப்பை பெற முடியாதிருந்தாலோ அல்லது வேறு காரணங்களால் உங்கள் ஸ்மார்ட் போனில் இணைய இணைப்பை செயற்படுத்த முடியாவிட்டாலோ அதற்கு கவலை கொள்ள வேண்டியதில்லை...! குறிப்பிட்ட பாடலை இந்த செயலியில் உள்ளிட்ட பின் பிறகொரு சந்தர்பத்தில் இணைய இணைப்பை பெற்ற பின் அதனை பெற்றுக்கொள்ள முடியும்.தொடர்புடைய இடுகை:
அத்துடன் குறிப்பிட்ட பாடலை நீங்கள் வீடியோ வடிவில் பெற விரும்பினால் அதனை உடனுக்குடன் யூடியூப் தளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் அதன் பாடல் வரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இவைகள் தவிர நீங்கள் தேடிப்பெற்ற பாடலை நண்பர்களுடன் பகிந்துகொள்ள விரும்பினால் அதனை உடனுக்குடன் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சேவைகள் ஊடாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் இலகு. மேலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொண்ட பின் இந்த செயலியின் கீழே மத்திய பகுதியில் தரப்பட்டுள்ள பட்டனை சுட்டுவதன் மூலம் ஒலிக்கும் பாடலை இந்த செயலியில் உள்ளிட முடியும்.

இனி அது தானாகவே இணையத்தின் மூலம் கண்டறியப்பட்டு உங்கள் கண்முன் காட்டப்படும்.

பிறகு அதனை கேற்பதும், பார்ப்பதும், தரவிறக்குவதும், நண்பர்களுடன் பகிர்வதும் உங்கள் கையில்

நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.


தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top