உள்வரக்கூடிய அழைப்புக்களையும், வெளிச் செல்லக்கூடிய அழைப்புக்களையும் குரல் பதிவாக சேமித்துக் கொள்ள விரும்புகிறீர்களா?

Android Call Recorder


நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் எனின் இதற்கென ஏராளமான  செயலிகள் ப்ளே ஸ்டோரில்  தரப்பட்டுள்ளன.

ACR குரல் அழைப்புக்களை பதியும் செயலி

இருந்தாலும் ACR எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி சிறந்த வசதிகளை தருகிறது.

நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ACR குரல் அழைப்புக்களை பதியும் செயலியின் சிறப்பம்சங்கள்.

எளிமையான வடிவமைப்பு

இது எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான இடைமுகத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட அனைத்து அழைப்புக்களையும் ஒரே பார்வையில் பார்க்க முடிவதுடன் உள்வந்த அழைப்புக்கள், வெளிச்சென்ற அழைப்புக்கள் என தனித்தனியாக அறிந்து கொள்ளவும்  முடியும்.மேலும் உங்களுக்கு மிகவும் முக்கிய அழைப்புக்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் வசதியும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


அழைப்புக்களை பதிவு செய்யும் முறை 

உள்வரக்கூடிய அழைப்புக்களையும் வெளிச் செல்லக்கூடிய அழைப்புக்களையும் தானாவே பதிவு செய்யும்  வசதி (Automatic) இதில் தரப்படுள்ளதுடன், நீங்கள் விரும்பினால் மாத்திரம் (Manual)  அதனை பதிவு செய்து கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
உள்வரக்கூடிய அழைப்புக்களை மாத்திரம் சேமிக்க விரும்பினால் உள்வரக்கூடிய அழைப்புக்களை மாத்திரமோ, அல்லது வெளிச் செல்லக்கூடிய அழைப்புக்களை மாத்திரம் சேமிக்க விரும்பினால் வெளிச் செல்லக்கூடிய அழைப்புக்களை மாத்திரமோ சேமிக்கும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.


பதிவுகளை தானாக நீக்கும் வசதி 

மேலும் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள நினைவகத்தை மீதப்படுத்திக் கொள்ளும் வகயில் "குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட" அழைப்புக்கள் தானாக நீங்கும் வகையிலும் அமைத்துக்கொள்ள முடியும். 


குரல் பதிவுகளை நீக்கினாலும் திரும்பப்பெறும் வசதி.
மேலும் இதில் "ரீசைக்கிள் பின்" (Recycle bin) எனும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் இதனை செயற்படுத்திக் கொள்ளலாம், இதனை செயற்படுத்தியிருந்தால் நீங்கள் நீக்கிய குரல் பதிவுகளையும் ரீசைக்கிள் பின் மூலம் மீள பெற்றுக் கொள்ளலாம்.

கடவுச்சொல் இட்டு பாதுகாக்கும் வசதிஎமது தனிப்பட்ட உரையாடல்கள் மூன்றாம் நபர் காதுகளுக்கு சென்றால் விபரீதமாகும் சந்தர்பங்களும் உண்டு, எனவே இந்த செயலியை உங்களால் மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடவுச்சொல் இட்டு பாதுகாக்கும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


தமிழ் மொழியிலேயே பயன்படுத்தலாமே.

அனைத்துக்கும் மேலாக நமது தாய் மொழியான தமிழ் மொழியிலேயே இந்த செயலியை பயன்படுத்திக் கொள்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளன.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

Love to hear what you think!

1 comments:

 
Top