உலகை ஒரு கிராமம் போல் மாற்றியுள்ள இன்றைய தொழில்நுட்பமானது உலகின் எந்த ஒரு மூலையில் இருப்பவருடனும் நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொண்டு தமது எண்ணங்கள் கருத்துக்களை மிகவும் தெளிவாக பகிர்ந்துகொள்ளும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.


ஒரு பில்லியன் மாதாந்த பயனர்களை எட்டிய ஜிமெயில் (2-Feb-2016)

தொடர்பாடலுக்கு என தோற்றம் பெற்ற கூகுளின் மிக முக்கிய சேவைகளுள் ஒன்றான ஜிமெயில் சேவை மாதாந்தம் ஒரு பில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு சேவை எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

இது தொடர்பில் கூகுள் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தது.2012 ஆண்டு ஜிமெயில் சேவையின் முழு உரிமத்தை கூகுள் பெறும் போது அது 425 மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் அடுத்த மூன்றரை வருடங்களுக்கு அது 2.5 மடங்காக உயர்ந்து ஒரு பில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு மின்னஞ்சல் சேவை எனும் பெருமையையும் இது பெறுகிறது.


தொடர்புடைய இடுகை:
ஒரு பில்லியன் மாதாந்த பயனர்களை எட்டிய வாட்ஸ்ஆப் (1-Feb-2016)

கூகுளுக்கு கடும் போட்டியாக அமைந்திருக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது பேஸ்புக் நிறுவனம்தான்.

வாட்ஸ்அப் மீது கண் வைத்திருந்த கூகுள் நிறுவனத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு வாட்ஸ்அப் சேவையை தனதாக்கிக் கொண்ட பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது வாட்ஸ்அப் மூலமாகவும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.One billion people now use WhatsApp. Congrats to Jan, Brian and everyone who helped reach this milestone! WhatsApp's...
Posted by Mark Zuckerberg on Monday, February 1, 2016

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வாட்ஸ்அப் சேவை மாதாந்தம் 900 மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. எனினும் அடுத்த ஐந்து மாதங்களுக்குள் இதன் எண்ணிக்கை மேலும் 100 மில்லையன்களால் அதிகரித்து ஒரு பில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு சேவையாக மாறியுள்ளது வாட்ஸ்அப்.

இதன் வேகமான அதிகரிப்புக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப் இல் ஏற்படுத்தப்பட்ட அந்த சுவையான மாற்றமும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். அதாவது வாட்ஸ்அப் சேவை வருடாந்த சாந்தா இன்றி முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்வதற்கான மாற்றமே அதுவாகும்.

மூலம்: வாட்ஸ்அப்


தொடர்புடைய இடுகை:உலகில் பயன்படுத்தப்படும் 1 பில்லியன் ஆப்பிள் சாதனங்கள்
 (26-January-2016)

உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஆப்பிள்களில் ஐபோனை அறிமுகப்படுத்திய ஆப்பிளையும் குறிப்பிடலாம் :)

2007 ஆம் ஆண்டு ஐபோன் எனும் ஒரு தனித்துவமான சாதனத்தின் மூலம் உலகில் புதியதொரு புரட்சிக்கு வித்திட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று ஐபோன், ஐபேட், ஆப்பிள் டி.வி, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் என அதன் சாதனங்களின் சங்கிலித் தொடரை விரிவு படுத்தியுள்ளது.


இவ்வாறான பில்லியன் ஒரு பில்லியன் ஆப்பிள் சாதனங்கள் உலகில் பயன்படுத்தப்பட்டு வருவதாக வருவதாக அண்மையில் ஆப்பில் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மூலம்: ஆப்பிள் 

மிக வேகமாக மில்லியனில் இருந்து பில்லியனுக்கு அடியெடுத்து வைக்கும் தொழில்நுட்ப வருகைகளின் தடயங்கலானது உலக மக்கள் தொழில்நுட்ப வருகைகளில் காட்டும் அதீத ஆர்வாத்தையும் அத்தியாவசியத்தையுமே எடுத்து நிற்கின்றன.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top