நீங்கள் ஆண்ட்ராய்டு அல்லது  ஐபோன் பயன்படுத்தும் அதேவேளை அதன் மூலம் வீடியோ எடிட்டிங் செய்து கொள்ளவும் விரும்புகிறீர்களா?

அடோபி பிரீமியர் கிளிப் செயலி


ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் மூலமாக வீடியோ எடிட்டிங் செய்வதற்கென எமக்கு ஏராளமான செயலிகள் உதவுகின்றன.


இதெற்கென பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் கீன்மாஸ்டர் செயலி பற்றி நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.

அதே போன்ற ஆனால் சற்று வேறுபட்ட தோற்றத்தையும் வசதிகளையும் தரக்கூடிய செயலியே அடோபி நிறுவனத்தின் "அடோபி பிரீமியர் கிளிப்" எனும் செயலியும் ஆகும்.
அடோபி நிறுவனம் கணினிகளுக்கு என அறிமுகப்படுத்தும் மென்பொருள்களை பயன்படுத்துவதற்கு பரீட்சயமோ அல்லது வழிகாட்டல்களோ அவசியம். எனினும் ஸ்மார்ட் போன்களுக்கான செயலிகள் அவ்வாறன்று எந்த ஒருவராலும் மிக இலகுவில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எனவே கணினி மென்பொருள்களை பயன்படுத்தி நாம் வீடியோ எடிட்டிங் செய்யும் போது நாம் மேற்கொள்ளும் பல முக்கியமான வசதிகளை இந்த "அடோபி பிரீமியர் கிளிப்" எனும் ஸ்மார்ட் சாதனங்களுக்கான செயலி மூலமும் மேற்கொள்ள முடியும்.


அடோபி பிரீமியர் கிளிப் செயலியை பயன்படுத்தி......

நாம் எமது ஸ்மார்ட் போன் மூலம் பிடிக்கக்கூடிய புகைப்படங்களை ஒன்றிணைத்து அவற்றுக்கு பின்னணி இசைகளை அல்லது பாடல்களை வழங்கி அவற்றை ஒரு வீடியோ கோப்பாக தயாரித்துக் கொள்ள முடியும்.

  • பின்னணி - Background
நீங்கள் தயாரிக்கும் வீடியோ கோப்பில் தோன்றும் ஒரு புகைப்படம் எவ்வளவு நேரம் தோன்ற வேண்டும் என்பதையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் அமைத்துக்கொள்ளலாம்.எமது ஸ்மார்ட் போனில் உள்ள வீடியோ கோப்புக்களின் தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்ளவும் அவற்றுக்கு புதிய பின்னணி இசைகள் பாடல்களை வழங்கவும் முடியும்.
மேலும் நீங்கள் தயாரிக்கக்கூடிய வீடியோ கோப்புக்களுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டே அழகிய வாசகங்களை சேர்க்கவும் முடியும்.


தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்ய கூகுள் இன்டிக் டூல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.

இதன் மூலம் நீங்கள் வீடியோ எடிட்டிங் செய்யும் போது இரண்டு வழிகளை பயன்படுத்தலாம். அதில் ஒன்று Automatic என்பதாகும் மற்றையது Freeform என்பதாகும்.இதில் நீங்கள் Freeform முறையை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்யும் போது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

இறுதியாக நீங்கள் உருவாக்கிய வீடியோ கோப்புக்களை கேலரியிலோ அல்லது அடோபி இணைய செமிப்பகத்திலோ சேமித்துக்கொள்ள முடியும்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top