மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய தொழில்நுட்ப உலகில் மெகா பைட்(MB) , ஜிகா பைட் (GB) போன்றவற்றில் நாம் பேசிய காலம் மறைந்து இன்று அனைவரது நாவும் "டெரா பைட்" எனும் நாமத்தை உச்சரிக்க துவங்கியுள்ளது.

 எஸ்.எஸ்.டி


அந்தவகையில் இன்று அறிமுகப்படுத்தப்படும் ஹர்ட் டிஸ்க் மற்றும்  எஸ்.எஸ்.டி நினைவகங்கள் போன்றன டெரா பைட் நினைவகங்களை கொண்டதாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஏன், அண்மையில் சாம்சுங் அறிமுகப்படுத்தியிருந்த 2 டெரா பைட் எஸ்.எஸ்.டி நினைவகத்தை ஸ்மார்ட் போன்களில் கூட பயன்படுத்த முடியுமாக இருந்தது.

13 டெரா பைட் எஸ்.எஸ்.டி நினைவகம்

எது எப்படியோ, தற்பொழுது உலகின் அதி கூடிய நினைவகத்தை கொண்ட எஸ்.எஸ்.டி நினைவகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபிக்ஸ் ஸ்டார்ஸ் (Fixstars) நிறுவனம்.

13 டெரா பைட் நினைவகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது SSD-13000M என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 2800 டி.வி.டி  இறுவட்டுக்களில் சேமிக்கக்கூடிய தரவுகளை 2.5 அங்குலம் கொண்ட இந்த எஸ்.எஸ்.டி நினைவகத்தில் சேமித்துக்கொள்ள முடியும்.


வெப்பமடைவதை கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இது செக்கனுக்கு 540 மெகா பைட் வேகத்தில் தரவுகளை வாசிக்கும் திறனையும்  செக்கனுக்கு 520 மெகா பைட் வேகத்தில் தரவுகளை எழுதும் திறனையும் கொண்டுள்ளது.

இதன் விலை 13000 அமெரிக்க டொலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதிர்வரும் மாதம் ஐக்கிய இராஜ்யத்தில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top