லாஸ் வேகஸ் நகரில் இடம்பெற்றுவரும் சர்வதேச நுகர்வோர் கண்காட்சியில் (CES) அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான பல தொழில்நுட்ப வருகைகள் பற்றி நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறியத்தந்திருந்தோம்.அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வருகைகளுள் எல் ஜி அறிமுகப்படுத்திய தொலைக்காட்சியும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய ஒரு தொழில்நுட்ப வருகையாகும்.


LG 98 UH9800 வகையில் அமைந்த இது 8K தொளிவுத் திறனில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது தொலைகாட்சியாகும்.

இது  7680 x 4320 Pixel Resolution இல் அமைந்த 98 அங்குல திரையை திரையை கொண்டுள்ளது இது Full HD திரையை விடவும் 16 மடங்கு தெளிவுத்திறன் கூடியதாகும்.HDR தொழில்நுட்பத்தை தன்னகமாக கொண்டுள்ள இது ஸ்மார்ட் தொலைகாட்சிகளுக்கான LG யின் WebOS 3.0 எனும் இயங்குதளத்தை கொண்டியங்கும் முதலாவது தொலைக்காட்சி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Love to hear what you think!

3 comments:

 1. IFTTT இதற்கான முழுமையான விளக்கம் எனகுதேவை தோழரே.... எனது மின்னஞ்சல் (mkbsc27@gmail.com)அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைப்பில் இருக்கும் பதிவை பாருங்கள்

   http://goo.gl/H02rk2

   நீக்கு

 
Top