இன்று அவரவர் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவகையில் விதவிதமான ஸ்மார்ட் போன்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அத்துடன் எமது அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் துணைபுரியக்கூடிய பல்வேறு வசதிகள் இன்று அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன்களானது அவரவர் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது என கூறலாம்.

மேலும் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியின் காரணமாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போனில் இருந்த ஒரு வசதி இன்று அதனை விட பல மடங்கு மேம்படுத்தபட்டிருக்கும்.

எனவே நாமும் முனைய தொழில்நுட்பத்தை விட்டுவிட்டு புதிய தொழில்நுட்பத்துக்கு நகரவே முயற்சிப்போம்.

இதன் போது அனைவருக்கும் எழும் ஒரு பிரச்சினை தான் "தெரிவு" எனும் பிரச்சினையாகும்.

அதாவது உங்கள் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறான ஸ்மார்ட் போன்கள் பல இருக்கலாம். அவற்றுள் எதை தெரிவு செய்வது என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சினை ஆகும்.

Geekaphone இணையதளம்.

இது போன்ற சந்தர்பங்களில் உங்களுக்கு கை  கொடுக்கின்றது Geekaphone எனும் இணையதளம்.

குறிப்பிட்ட ஒரு ஸ்மார்ட் போனுடன் இன்னுமொரு ஸ்மார்ட் போனை ஒப்பிட்டு அவைகள் தொடர்பான தகவல்களை தனித்தனியாக புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இணையதளம்.
இந்த இணையதளத்தை கணினிகள் மூலம் மாத்திரமல்லாமல் ஸ்மார்ட் போன்கள் மூலமாகவும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இந்த இணையதளத்துக்கான இனைப்பு கீலே வழங்கப்பட்டுள்ளது.தொடர்புடைய இடுகை:

இந்த தளத்திற்குச் சென்று நீங்கள் விரும்பக்கூடிய ஸ்மார்ட் போன்களை தெரிவு செய்வதன் மூலம் அவைகள் தொடர்பான விபரக்குரிப்புகளை வெவ்வேறாகவும் ஒரே பார்வையிலும் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த இணையதளத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து ஸ்மார்ட் போன்களின் விபரக்குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.


மேலும் குறிப்பிட்ட ஒரு ஸ்மார்ட் போனின் எந்த ஒரு தகவலையும் விட்டுவைக்காமல் அடி முதல் நுனி வரை ஒவ்வொரு தகவலையும் மிக ஆழமாக அறிந்து கொள்ள முடிகிறது.

அடுத்த ஸ்மார்ட் போனை தெரிவு செய்வதில் உங்களுக்கும் குழப்பங்கள் ஏற்பட்டால் குறிப்பிட்ட தளத்திற்கு ஒருதடவை விஜயம் செய்து தான் பாருங்களேன்.

Geekaphone


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top