உதவி செய்தவர்களுக்கு  நன்றி தெரிவிப்பது ஒவ்வொருவரினதும் கடமையல்லவா?


நாம் பல்வேறு சந்தர்பங்களில் ஒருவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
உதாரணத்திற்கு:


 • 10 மாதங்கள் சுமந்து எம்மை பெற்றெடுத்த அம்மாவுக்கு.
 • தனது கஷ்டங்களை பொருட்படுத்தாது எமது நலனில் மாத்திரம் அக்கறை கொண்ட அப்பாவுக்கு.
 • தனது வளர்ச்சியை நேசித்த சகோதரனுக்கு.
 • அம்மாவுக்கு நிகராக தன் மேல் அக்கறை கொண்ட சகோதரிக்கு 
 • ஆபத்தில் உதவிய நண்பனுக்கு.
 • வாழ்க்கைக்கு அர்த்தத்தை தர வந்த மனைவிக்கு.
 • பாடங்கள் கற்றுத்தந்த ஆசியரியருக்கு.
 • நோயை குணப்படுத்திய வைத்தியருக்கு.
 • போட்டியில் வெற்றி பெற உதவிய நடுவருக்கு :)
 • நமது பிரச்சினை ஒன்றுக்கு இணையத்தின் வாயிலாக தீர்வு கூறிய இணைய நண்பருக்கு.


இது போன்ற வெவ்வேறு சந்தர்பங்களிலும் நாம் இன்னுமொருவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

எனவே நாம் அவர்களுக்கு சாதாரணமாக "நன்றி" அல்லது  "Thank you" என்று கூறுவதை விட "அவர்கள் உதவி செய்யும் போது எமது உள்ளத்தில் தோன்றிய மகிழ்ச்சியை வார்த்தைகளாக கோர்த்து அழகிய முறையில் நன்றியை தெரிவுக்க உதவுகிறது Sendthanks எனும் இணையதளம்.

நாம் மேலே குறிப்பிட்டது போன்று எமக்கு வெவ்வேறு சந்தர்பங்களிலும் உதவி செய்த ஒவ்வொரு நபர்களுக்கும் பொருத்தமான வாசகங்களை இந்த தளம் கொண்டுள்ளது.

உதாரணத்திற்கு உங்களுக்கு கற்பித்த ஆசிரியருக்கு எவ்வாறு நன்றி தெரிவிக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறான வாசகங்கள் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளன.

அவற்றை அழகிய அனிமேஷன் முறையில் இயங்கும் வகையில் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் இலகு. இதனை கணினிகளில் மாத்திரமல்லாமல் ஸ்மார்ட் போன்களிலும் மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.1. நீங்களும் இதனை மேற்கொள்ள விரும்பினால் முதலில் Sendthanks செல்க.

2. பின் நன்றி கூற வேண்டிய வர்கத்தினரை தெரிவு செய்க. 
(உதாரணத்திற்கு: அம்மா, அப்பா, ஆசிரியர், வைத்தியர்.)

3. பின் தோன்றும் சாளரத்தில் அவர்களின் பெயரை உள்ளிடுக.
 • இனி அடுத்த சாளரத்தில் அனிமேஷன் முறையில் இயங்கியவாறு அவர்களுக்கு பொருத்தமான வாசகங்கள் தோன்றும்.4. பின்னர் Next பட்டனை அழுத்த உங்கள் பெயரை உள்ளிடுவதற்கான சாளரம் தோன்றும் அதில் உங்கள் பெயரை உள்ளிட்ட பின் கிடைக்கும் இணைப்பை பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மூலமோ அல்லது ஏனைய வழிகளிலோ  குறிப்பிட்ட நபர்களுடன் பகிந்து கொள்ளலாம்.அந்த இணைப்பை அவர்கள் சுட்டும் போது நீங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அவர்களுக்கு அனிமேஷன் முறையில் இயங்கும்.

அவ்வளவுதான்.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top