தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் நாம் ஏராளமான பயன்களை பெற்றுக்கொண்டாலும் கூட சில சந்தர்பங்களில் அது எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு சென்றுவிடும் சந்தர்பங்களும் அடிக்கடி ஏற்படவே செய்கின்றன.

ஐஓஎஸ் 9 வை பை எசிஸ்ட்


அந்த வகையில் iOS 9 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Wi-Fi Assist  எனும் வசதியானது அண்மையில் ஒரு வாலிபரை கதிகலங்க வைத்திருந்தது.


சான் பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கும் ஆஷ்டன் பைன்கோல்ட் என்பவருக்கே இந்த பரிதாப நிலை ஏற்பட்டது.

அப்படி என்னதான் செய்துவிட்டது இந்த Wi-Fi Assist வசதி 


ஐஓஎஸ் 9 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Wi-Fi Assist வசதியானது வை-பை சிக்னல் போதியளவு கிடைக்காத பட்சத்தில் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி தானாகவே "மொபைல் டேட்டா" வசதியை பயன்படுத்தக்கூடியதாகும்.

இந்த வசதி ஆஷ்டன் பைன்கோல்ட் என்பவரது ஐபோனிலும் செயற்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டில் இருக்கும் வை-பை சிக்னல் இவரது அறைக்கு போதியளவு கிடைக்கவில்லை. எனவே, தான் மொபைல் டேட்டா வசதியைத் தான் பயன்படுத்துகிறேன் என்பதை அறியாத இவர் இணையத்தை 144 ஜிபி வரை பயன்படுத்தித் தள்ளியுள்ளார். இதுவே மாத இறுதியில் 2,021 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு இவரை தள்ளியுள்ளது. இது இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 290,000 ஆகும்.

இது தொடர்பில் குறிப்பிட்ட வாலிபர் CBS News இற்கு கருத்து தெரிவிக்கும் போது "எனது தந்தை என்னை கொன்றுவிடுவாரோ என எண்ணியதாகவும் குறிப்பிட்டிருந்தார்"எனவே ஐஓஎஸ் 9 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இதனை ஒரு வசதி என்பதா? அல்லது குறைபாடு என்பதா?


எமது கருத்து:

இணையத்தை வரையறை இன்றி பயன்படுத்துவதற்கான இணைய இணைப்பை பெற்றிருப்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பொருத்தமானது எனினும் மாதாந்தம் குறிப்பிட்ட ஒரு வரையறையுடன் பயன்படுத்துவதற்கான இணைய இணைப்பை பெற்றிருப்பவர்களுக்கு இந்த வசதி அவ்வளவு பொருத்தமற்றது.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

2 comments:

 
Top