லாஸ் வேகஸ் நகரில் இடம்பெற்றுவரும் தொழிநுட்ப கண்காட்சியியில் ZTE நிறுவனமும் பல தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


ZTE ஸ்மார்ட் போன்


இந்நிகழ்வில் ZTE அறிமுகப்படுத்திய இந்த ஸ்மார்ட் போன் ZTE Grand X3 என அழைக்கப்படுகிறது.  இது ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

5.5 அங்குல HD திரையை கொண்டுள்ள இதில் 16 ஜிபி உள்ளக நினைவகம் தரப்பட்டுள்ளது. இதன் நினைவகத்தை மைக்ரோ எஸ் டி கார்டை பயன்படுத்தி மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 வகையில் அமைந்த ப்ராசசரை கொண்டியங்கும் அதேவேளை 2 ஜிபி RAM நினைவகத்தையும்  கொண்டுள்ளது.

அத்துடன் செல்பி புகைப்படங்களை பிடிப்பதற்கும் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் என 2 மெகாபிக்சல் தெளிவுத் திறனுடைய முன்பக்க கேமரா இதில் தரப்பட்டுள்ளதுடன் 8  மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா தரப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் மின்னை சேமித்துக் கொள்வதற்கு என 3080 mAh திறன் வாய்ந்த பேட்டரியை இது கொண்டுள்ளதுடன் வேகமாக மின்னேற்றிக் கொள்வதற்கும் வேகமாக தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கும் என Type-C வகையில் அமைந்த இணைப்பியும் இதில் தரப்பட்டுள்ளது.


இவைகள் தவிர 4 ஜி வலையமைப்புக்கான ஆதரவை இது கொண்டுள்ளதுடன் ப்ளூடூத், வை-பை போன்ற பொதுவான அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

இதன் விலை 129.99 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது 8700 இந்திய ரூபாய்கள் ஆகும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top