ஸ்மார்ட் போன்களை வடிவமைக்கும் சீன நிறுவனங்களுள் ஒன்றான சியோமி (Xiaomi) நிறுவனமானது ஸ்மார்ட் போன் சந்தையில் சிறந்த ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளது.

சியோமி ஸ்மார்ட் போன்


அந்த வகையில் சிறந்த வசதிகளுடன் குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.


இந்த ஸ்மார்ட் போனானது "சியோமி ரெட்மி 3" என அழைக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் இது உலோகத்திலான சுற்றுப்புறத்தை கொண்டுள்ளது.

ஒரு முறை மின்னேற்றிக் கொள்வதன் மூலம் மிக நீண்ட நேரம் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றவகையில் 4,100mAh வலுவுடைய மிகவும் வலிமையான பேட்டரியை இது கொண்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

5 அங்குல திரையை கொண்டுள்ள இது குவால்காம் ஸ்னேப்டிராகன் 616 எனும் வகையில் அமைந்த ப்ராசசர் மற்றும் 2 ஜிபி RAM ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் இதில் 16 ஜிபி உள்ளக நினைவகம் தரப்பட்டுள்ளது. நினைவகத்தை மேலும் அதுகரித்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு மைக்ரோ எஸ்.டி கார்டை பயன்படுத்தி 128 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

அத்துடன் 5 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்ட முன்பக்க கேமராவும் 13 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்ட பிரதான கேமராவும் இதில் தரப்பட்டுள்ளன.


144 கிராம் எடையை கொண்டுள்ள இது 69.6 மில்லிமீட்டர் நீளம் 39.3 மில்லிமீட்டர் அகலம் 8.5 மில்லிமீட்டர் தடிப்பை கொண்டுள்ளது.

இதன் விலை  (RMB 699) கிட்டத்தட்ட $107 அமெரிக்க டொலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயில் ஏறத்தாழ 7102 ரூபாய்கள் ஆகும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top