இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கடவுச்சொல் என்பது இன்றியமையாத ஒன்றாகும். நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் இன்னுமொருவரால் மிக இலகுவாக ஊகிக்கக்கூடியதாக அமையும் பட்சத்தில் அது பலவீனமானதாக அமைந்துவிடுகிறது.பலவீனமான கடவுச்சொற்கள் எமக்கு மிக விரைவில் ஆபத்தை சந்திக்க வழிவகுத்துவிடும்.

அந்தவகையில் கடந்த ஆண்டு இணையப்பயனர்களால் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான 25 கடவுச்சொற்களை வெளியிட்டுள்ளது ஸ்பிளாஸ் டேட்டா எனும் இணையதளம்.

ஸ்பிளாஸ் டேட்டா எனப்படுவது கடவுச்சொற்களை நிர்வகிக்கும் மென்பொருள்களை தயாரிக்கும் ஸ்தாபனமாகும்.

இது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2015 ஆம் ஆண்டின் மிக மோசமான கடவுச்சொற்களுள் முக்கியமான கடவுச்சொற்களாக 123456,  password, மற்றும் 12345678 போன்ற கடவுச்சொற்கள் இனங்காணப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டில் மிக மோசமான கடவுச்சொற்களாக இனங்காணப்பட்ட 123456,  password போன்ற கடவுச்சொற்களே 2015 ஆம் ஆண்டிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதோ இந்த கடவுச்சொல்லை கொஞ்சம் பாருங்கள் 1qaz2wsx இது பார்க்கும் போது வலிமையான ஒரு கடவுச்சொல் போன்று தோன்றுகிறது அல்லவா?. எனினும் இது கடந்த வருடம் பயன்படுத்தப்பட்ட மோசமான கடவுச்சொற்களில் 15 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஏன் தெரியுமா? இது கீபோர்ட்டில் உள்ள எழுத்துக்களின் முதல் இரு வரிகளாகும்.


தொடர்புடைய இடுகைகள்:
அதே போன்று கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்ட மிக மோசமான கடவுச்சொற்களின் பட்டியல் பின்வருமாறு.

மிக மோசமான கடவுச் சொற்களின் பட்டியல் 


இடம் 2015 2014 ஆம்
ஆண்டில் 
1 123456 (1) மாற்றமில்லை
2 password (2) மாற்றமில்லை
3 12345678 4 ஆம் இடம்
4 qwerty 5 ஆம் இடம்
5 12345 3 ஆம் இடம்
6 123456789 (6) மாற்றமில்லை
7 football 10 ஆம் இடம்
8 1234  7 ஆம் இடம்
9 1234567 11 ஆம் இடம்
10 baseball  8 ஆம் இடம்
11 welcome புதிய சொல்
12 1234567890 புதிய சொல்
13 abc123 14 ஆம் இடம்
14 111111 15 ஆம் இடம்
15 1qaz2wsx புதிய சொல்
16 dragon 9 ஆம் இடம்
17 master 19 ஆம் இடம்
18 monkey 12 ஆம் இடம்
19 letmein 13 ஆம் இடம்
20 login புதிய சொல்
21 princess புதிய சொல்
22 qwertyuiop புதிய சொல்
23 solo புதிய சொல்
24 passw0rd புதிய சொல்
25 starwars புதிய சொல்

எது எப்படியோ இணையம் எனும் போது வெறும் பயன்களை மாத்திரம் பெறக்கூடிய ஒன்று அன்று. மாறாக அவற்றுள் அபாயங்களும், அச்சுறுத்தல்களும் இருக்கவே செய்கின்றன. எனவே எமது பாதுகாப்பு எமது கையிலேயே உண்டு. 

நீங்களும் மேற்குறிப்பிட்டது போன்ற பலவீனமான கடவுச்சொற்களை பயன்படுத்துபவர் எனின் அதனை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாமே!இலகுவில் ஞாபகம் வைக்கக்கூடிய ஆனால் ஏனையவர்களால் ஊகிக்க முடியாத கடவுச் சொற்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்ளலாம் என்பதை அறிய விரும்பினால் கீழே இணைப்பிலிருக்கும் எமது முன்னைய பதிவை பார்க்க:
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top