வாட்ஸ்அப் பயனர்களை நோக்காக வைத்து பரவி வரும் ஒரு வைரஸ் நிரலை இனங்கண்டுள்ளது கொமோடோ லேப் நிறுவனம்.

வாட்ஸ்அப் வைரஸ்  பாதிப்பு


இது வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல் போன்ற போலியான தோற்றத்தை கொண்டிருக்கும்.

ஒரு Zip செய்யப்பட கோப்பாக உங்களை வந்தடையும் இந்த நிரலானது இதில் எவ்வாறான செய்திகள் தோன்றும் என்பதையும் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு உங்களுக்கு வரக்கூடிய மின்னஞ்சலின் தலைப்பின் இறுதியில்  xgod, Ydkpda போன்ற சொற்கள் காணப்படுவதுடன் அந்த செய்திகள் பின்வருமாறு அமைந்திருக்கும்.
  • You have obtained a voice notification xgod
  • An audio memo was missed. Ydkpda
  • A brief audio recording has been delivered! Jsvk
  • A short vocal recording was obtained npulf
  • A sound announcement has been received sqdw
  • You have a video announcement. Eom
  • A brief video note got delivered. Atjvqw
  • You’ve recently got a vocal message. Yop
இந்த வைரஸ் நிரலை நீங்கள் சுட்டினால் இது தானாகவே அவைகள் அவிழ்க்கப்பட்டு உங்கள் கணினியின் System  பகுதியில் வெவ்வேறு கோப்புறைக்குள் சென்று விடுவதுடன் Registry பகுதியும் பாதிக்கப்பட்டு இது தானாகவே இயங்கத்துவங்கும்.

இது Nivdort வகையை சார்ந்த நிரல் என இனங்காணப்பட்டுள்ளது இந்த வகை வைரஸ் நிரல்கள் கணினியில் இருக்கக்கூடிய தகவல்களை அதனை உருவாக்கியவருக்கு அனுப்பக்கூடியதாகும்.


இருப்பினும் உங்கள் கணினியில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் மூலம் இதனை நீக்கிக் கொள்ளமுடியும்.

என்றாலும் வந்த பின் யோசிப்பதை விட வரும் முன் காப்பதே சிறந்தது எனவே மேற்குறிப்பிட்ட வகையில் உங்களுக்கு மின்னஞ்சகள் வந்திருந்தாலோ அல்லது சந்தேகத்துக்கு இடமான இணைப்புக்கள் உங்களுக்கு வந்தாலோ அதனை உடனடியாக திறக்க முயற்சிக்க வேண்டாம். மேலும் வாட்ஸ்அப் தகவல்கள் எவ்விதத்திலும் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்க.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top