இன்று கணினி பயன்படுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவர்களே ஏராளாம்.வெறும் அழைப்புக்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் இன்றி இன்னும் ஏராளாமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்றைய ஸ்மார்ட் போன்கள் பயன்படுகின்றன.


எனவே நாம் இன்று அதிகமான நேரங்களை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் செலவிடுகின்றோம். இவ்வாறு நாம் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் அவற்றின் திரையில் இருந்து வெளிப்படக்கூடிய கதிர் வீச்சுக்களானது நேரடியாக எமது கண்களை பாதிப்படைய செய்கின்றன.

இதன் காரணமாக பலரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இதன் காரணமாக பலருக்கு ஒற்றை தலைவலி ஏற்படுவதும், இன்னும் சிலருக்கு தூக்கமின்மை, கண்கள் கூசுதல், போன்ற இன்னும் பல பிரச்சினைகள் ஏற்படுவதும் மறுக்கமுடியாத உண்மை.

எது எப்படியோ பிரச்சினை என ஒன்றிருக்கும் போது அதற்கு தீர்வு என ஒன்று இருக்கத்தானே செய்கிறது.நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அதேவேளை மேற்குறிப்பிட்ட பிரச்சினையையும் எதிர்நோக்குபவர் எனின் உங்களுக்கு உதவுகிறது Twilight எனும் அப்ளிகேஷன்.

இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனின் திரையில் இருந்து வெளிப்படும் அளவுக்கதிகமான வெளிச்சத்தை கட்டுப்படுத்தி உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

திரையில் இருந்து வெளிப்படும் நீல நிற கதிகளானது எமது நிம்மதியான தூக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் கதிர்களாகும் நீங்கள் இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனிற்கு நிறுவிக்கொள்வதன் மூலம் இந்த நீல நிற கதிர்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.


மேலும் எம்மை சூழ போதிய வெளிச்சம் உள்ள போது( பகல் நேரங்களில்) , திரையில் இருந்து வெளிப்படும் கதிர்கள் எமது கண்களை அவ்வளவாக பாதிப்பதில்லை என்றாலும் வெளிச்சம் குறைந்த இருள்சூழ்ந்த (இரவு நேரங்களில்) நாம் எமது ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது அது நேரடியாகவே எமது கண்களை பாதிப்படைய செய்கிறது.


எனவே இதற்கு ஏற்றவாறு பகல் நேரங்களில் இந்த செயலி செயற்படாதவாறு, ஏனைய நேரங்களில் போல் எமது ஸ்மார்ட் போன் சாதாரணமாக செயற்படுவதற்கும், இரவு நேரங்களில் இந்த செயலி தானாகவே செயற்பட்டு திரையில் இருந்து வெளிப்படும் நீல நிற கதிர்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் அமைத்துக் கொள்வதற்கான வசதி இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.இல்லை, இல்லை, பகல் நேரம் இரவு நேரம் என அல்லாது எப்பொழுதுமே 
இந்த செயலி செயற்பாட்டில் இருக்க வேண்டும் என நீங்கள் கருதினால் அதில் தரப்பட்டுள்ள Always என்பதை தெரிவு செய்துகொள்ளலாம்.

மேலும் திரையில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தை உங்களுக்குத் தேவையான அளவுகளில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. அத்துடன் உங்களுக்குத் தேவையான பல்வேறு அளவுகளில் அவற்றை சேமித்துக் கொள்ளவும் முடியும்.
அதாவது நீங்கள் மின்னூல்கள் வாசிக்கும் போது குறிப்பிட்ட ஒரு அளவிலும், இணையத்தை பயன்படுத்தும் போது ஒரு அளவிலும் என வெவ்வேறு அளவுகளில் அதன் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி அவற்றை தேவையான சந்தர்பங்களில் பயன்படுத்தும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை மில்லியன் கணக்கான நபர்கள் நிறுவி பயன்படுத்தி வருகின்றனர். விரும்பினால் நீங்களும் பயன்படுத்தித்தான் பாருங்களேன்.


இதற்கான செயலிகள் ஐபோனுக்கு இல்லை என்றாலும் iOS இயங்குதளத்தின் அடுத்த மேம்படுத்தலில் இவ்வாறன ஒரு வசதி ஐபோனுக்கு வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய இடுகை:நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் எமது தளத்துக்கு வருகை தருபவர் எனின் இந்த பதிவை வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் பிளஸ் போன்றவற்றின் ஊடாக மிக இலகுவில் பகிந்து கொள்வதற்கான வசதி உள்ளது.

உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள மறவாதீர்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top