இன்று நாம் இணையத்தை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றோம். அதற்கேற்றாட் போல் பல்வேறு சேவைகளை தரும் இணையதளங்களும் இன்று உருப்பெற்றுள்ளன.


தற்காலிக மின்னஞ்சல் உருவாக்க


அந்த வகையில் குறிப்பிட்ட சில வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு இணையதளங்களிலும் நாம் கணக்குகளை உருவாக்க வேண்டி இருக்கும்.

அவ்வாறு நாம் உருவாக்கும் கணக்குகளில் பேஸ்புக், கூகுள், யாஹூ, டுவிட்டர், ஸ்கைப், போன்றவைகள் தவிர நாம் பெரும்பாலான இணையதளங்களில் உருவாக்கும் கணக்குகள் தற்காலிகமாகவே அமைந்துவிடுகின்றன. அவற்றை நாம் நிரந்தரமாக பயன்படுத்துவதில்லை.

எனவே நாம் இவ்வாறு தற்காலிகமாக உருவாக்கிய தளங்களில் இருந்து அடிக்கடி வரக்கூடிய மின்னஞ்சல்கள் எமது மின்னஞ்சல் கணக்கையே அலங்கோலப்படுத்தி விடுகின்றன. அத்துடன் எமக்கு தேவையான முக்கிய தளங்களில் இருந்து வரக்கூடிய மின்னஞ்சல்கள் பின்தள்ளப்பட்டு விடுகின்றன.

தற்காலிக மின்னஞ்சல் கணக்கை உருவாக்க உதவும் இணையதளம்.

ஆகவே நாம் தற்காலிகமாக கணக்குகளை உருவாக்கும் இணையதளங்களில் எமது வழமையான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தாது ஒரு தற்காலிக மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்ள உதவுகிறது Getairmail எனும் இணையதளம்.


தொடர்புடைய இடுகை:


தற்காலிக மின்னஞ்சல் முகவரி


இந்த தளத்திற்குச் சென்று Get Temporary Email என்பதை சுட்டுவதன் மூலம் ஒரு தற்காலிக மின்னஞ்சல் முகவரியை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

இனி குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி எந்த ஒரு இணையதளத்திலும் கணக்குகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் உருவாக்கிய மின்னஞ்சல் கணக்கிற்கு வரக்கூடிய அனைத்து மின்னஞ்சல்களையும் உடனுக்குடன் கண்காணிக்க முடியும்.


உங்கள் தேவை நிறைவடைந்ததன் பின் குறிப்பிட்ட இணையப் பக்கத்திற்கான தாவலை (Tab) மூடுவதன் மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல் கணக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் முற்றாக நீக்கிக்கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top