உங்கள் ஸ்மார்ட் போனில் மைக்ரோ எஸ் டி கார்டை பயன்படுத்துவதற்கான வசதி இல்லையா? அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது சாம்சங் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய "எஸ் எஸ் டி டிரைவ்" சாதனம்.


எஸ் எஸ் டி டிரைவ்

சாம்சுங் நிறுவனத்தின் T3 எஸ் எஸ் டி டிரைவ்

லாஸ் வேகஸ் நகரில் இடம்பெற்றுவரும் தொழில்நுட்ப கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

T3 என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இது ஒரு வணிக அட்டையை விடவும் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம், அகலம், தடிப்பு முறையே 2.9 x 2.3 x 0.41 அங்குலங்கள் ஆகும். மேலும் இதன் நிறை கிட்டத்தட்ட 50 கிராம் மாத்திரமே ஆகும். எனவே வணிக பயன்பாட்டுக்காக தமது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவர்களுக்கும் ஸ்மார்ட் போனில் தரப்பட்டுள்ள இடம் போதாதே...! என எண்ணுபவர்களுக்கும் இது மிகவும் பொருத்தமானதாக அமையும்.

250 ஜிபி தொடக்கம் 2 டிபி வரையான நினைவகத்தை கொண்டது


இது 250 ஜிபி, 500 ஜிபி, 1 டிபி மற்றும் 2 டிபி ஆகிய ஆகிய வெவ்வேறு நினைவகங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தரப்பட்டுள்ள யு எஸ் பி 3.1 தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Type-C இணைப்பியானது ஸ்மார்ட் போன்களை இந்த எஸ் எஸ் டி T3 டிரைவ் சாதனத்துடன் இணைக்க உதவுகிறது. 

இதில் தரவுப்பரிமாற்ற வேகமானது செக்கனுக்கு 450 MB ஆகும். இது சாதாரண வன்தட்டுகளை 4 மடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • இணைப்பி - Connector
  • வணிக அட்டை - Business card
  • வன்தட்டு - Hard Disk

இதனை நவீன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் உட்பட டேப்லெட் சாதனங்கள், விண்டோஸ் கணினிகள் மற்றும் அப்பில் நிறுவனத்தின் மேக் கணினி போன்றவற்றிலும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.இது அடுத்த மாதமளவில் அமேரிக்கா, சீனா, கொரியா, உட்பட தெரிவு சில செய்யப்பட ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளது. பின்னர் இது உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படும்.

இருப்பினும் இதன் விலை விபரம் தொடர்பான எது வித தகவல்களும் இது வரை வெளியிடப்படவில்லை


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top