லாஸ் வேகஸ் நகரில் இடம்பெற்றுவரும் சர்வதேச நுகர்வோர் கண்காட்சியில் சாம்சுங் அறிமுகப்படுத்திய குளிர்சாதன பெட்டியும் குறிப்பிட்டுக்காட்ட வேண்டிய ஒரு தொழில்நுட்ப வரவாகும்.

சாம்சுங் குளிர்சாதனப் பெட்டி

சாம்சுங் பேமிலி ஹப்

இது "பேமிலி ஹப்" (Family Hub) என அழைக்கப்படுகின்றது. இதில் 21.5 அங்குல Full HD திரை தரப்பட்டுள்ளதுடன் பார்கோடு வாசிப்பதற்கான வசதி மற்றும் உள்ளக கேமரா போன்றவற்றையும் இது கொண்டுள்ளது.

நீங்கள் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இந்த குளிர்சாதனப் பெட்டியில் உள்ள கேமராவுடன் உங்கள் ஸ்மார்ட் போனை தொடர்புபடுத்தி நீங்கள் கொள்வனவு செய்ய வேண்டிய பொருட்களை தீர்மானித்துக் கொள்ளலாம்.

சாம்சுங் குளிர்சாதனப் பெட்டி


இந்த குளிர்சாதனப் பெட்டியில் நீங்கள் வைக்கும் அனைத்து பொருட்கள் தொடர்பான தகவல்களும் உடனுக்குடன் இதில் பதிவு செய்யப்படுவதுடன் அவற்றின் இருப்பு குறைவடையும் போது அது தொடர்பான Notification ஒன்றையும் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஸ்மார்ட் போனுக்கு ஏற்படுத்துகிறது.

அது மாத்திரம் அல்லது கழிவு விலையில் பொருட்கள் விற்பனைக்கு வரும் போது அது தொடர்பான தகவல்களையும் இந்த குளிர்சாதனப் பெட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். நீங்கள் கொரியாவில் வசிப்பவர் எனின் குறிப்பிட்ட குளிர்சாதனப்பெட்டியின் முன் இருந்தவாறே பெருட்களை கொள்வனவு செய்யவும் முடியும்.


மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள Speaker உடன் ப்ளூடூத் சாதனங்களை தொடர்புபடுத்திக் கொள்ளவும் முடியும்.

இது தொடர்பான விலை விவரங்களை இது வரை சாம்சுங் நிறுவனம் அறிவிக்கவில்லை.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top