ஆண்ட்ராய்டு இயங்குதளம் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். ஸ்மார்ட் சாதனங்களில் இயங்கும் இந்த இயங்குதளத்துக்கு என கூகுள் ப்ளே ஸ்டோரில் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் வரையான செயலிகள் தரப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் கணினியில்


ஆண்ட்ராய்டு செயலிகளை உங்கள் விண்டோஸ் கணினியில் எவ்வாறு பயன்படுத்தலாம் என நாம் எமது முன்னைய பதிவின் மூலம் உங்களுக்கு விளக்கியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.


ஆண்ட்ராய்டு லாலிபாப் ரீமிக்ஸ் இயங்குதளம் 

அனால் தற்பொழுது ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை கணினியின் இயங்குதளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது ரீமிக்ஸ் இயங்குதளம்.

கடந்த 12 ஆம் திகதி (12 - 1 -2016) அறிமுகப்படுத்தப்பட்ட இது தொழில்நுட்ப உலகில் அதிகம் பேசப்பட்டது.

இதனை கணினியின் வன்தட்டில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை புறம்பாக USB Flash Drive நினைவகங்களில் நிறுவி எந்த ஒரு கணினியிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

  • வன்தட்டு - Hard Disk


ரீமிக்ஸ் இயங்குதளத்தை நிறுவுவதற்கு வேண்டப்படும் அம்சங்கள்.

இதனை நிறுவுவதற்கு உங்களின் USB Flash Drive நினைவகமானது USB 3.0 பதிப்பை கொண்டிருத்தல் வேண்டும். மேலும் குறிப்பிட்ட USB சாதனம் குறைந்தது 8 ஜிபி நினைவகத்தை கொண்டிருத்தல் வேண்டும்.


ரீமிக்ஸ் இயங்குதளத்தை தரவிறக்குவது எப்படி?

இதனை ரீமிக்ஸ் இயங்குதளத்திற்கான உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளமுடியும். இது 708 MB அளவை கொண்டுள்ளது.


ரீமிக்ஸ் இயங்குதளத்தை நிறுவுவது எப்படி?1. நீங்கள் தரவிறக்கும் இது Zip செய்யப்பட ஒரு கோப்பாக அமைத்திருக்கும் அதனை Right Click செய்வதன் மூலம் Extract செய்துகொள்ள முடியும்.


  • கோப்பு = File 
2. இனி நீங்கள் Extract செய்துகொண்ட கோப்புறையில் Remix இயங்குதளத்தின் ISO கோப்புடன் remixos-usb-tool-B2016011102 டூல் தரப்பட்டிருக்கும் இந்த டூலை Double Click செய்யும் போது பெறப்படும் சாளரத்தின் ஊடாக உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் USB Flash Drive சாதனத்தையும் Remix இயங்குதளத்தின்  ISO கோப்பையும் தெரிவு செய்வதன் மூலம் அதனை உங்கள் USB Flash Drive இற்கு நிறுவிக்கொள்ள முடியும்.

  • அவ்வாறு நிறுவிக் கொண்டதன் பின் உங்கள் USB Flash Drive நினைவகத்தை கணினியில் இணைத்து Boot செய்க. இனி உங்களுக்கு Guest Mode மற்றும் Resident Mode ஆகிய இரு தெரிவுகள் கிடைக்கும்.


3. இதில் Guest Mode என்பதை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் Remix இயங்குதளத்தை தற்காலிகமாக பயன்படுத்தி பார்ப்பதற்காக துவக்கலாம். இதன் போது நீங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு மாற்றமும் இந்த இயங்குதளத்தில் சேமிக்கப்பட மாட்டாது.

5. நீங்கள் இந்த இயங்குதளத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த விரும்புபவர் Resident Mode என்பதை தெரிவு செய்வதன் மூலம் இதனை துவக்கலாம். இதன் போது நீங்கள் நிறுவும் செயலிகள் உட்பட இந்த இயங்குதளத்தில் மேற்கொள்ளும் அனைத்து மாற்றங்களும் இதில் சேமிக்கப்படும். எனவே நீங்கள் இந்த இயங்குதளத்தை எந்த ஒரு கணினியை பயன்படுத்தி மீண்டும் இயக்கினாலும் உங்கள் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டவாறு இருக்கும்.

ரீமிக்ஸ் இயங்குதளத்தின் சிறப்பம்சங்கள்:

  • இந்த இயங்குதளத்துடன் வை-பை வலையமைப்பை தொடர்பு படுத்தி இணையத்தை உலாவர முடியும். 
ரீமிக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவது எப்படி?


  • ஸ்மார்ட் போன்களில் போலவே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்கி பயன்படுத்த முடியும்.

  • உங்கள் சட்டை பையில் இட்டு உலகின் எந்த ஒரு பாகத்திற்கும் எடுத்துச்செல்ல முடியும். 

  • இந்த USB Flash Drive நினைவகத்தை இணைப்பதன் மூலம் எந்த ஒரு கணினியிலும் இதனை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ரீமிக்ஸ் இயங்குதளம் எப்படி இருக்கும்


  • மைக்ரோ எஸ்.டி கார்டை கணினியுடன் இணைத்து அதில் உள்ளவற்றை இந்த இயங்குதளத்தி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.உதவிக் குறிப்புகள், உபாயங்கள், மாற்று வழிகள். 

இந்த இயங்குதளத்தில் பயன்படுத்த உங்களுக்கு வை-பை இணைப்பு கிடைக்காவிட்டால் உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ஒரு வை-பை வலையமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இது தொடர்பான உதவிகளுக்கு கீழே இணைப்பில் இருக்கும் எமது முன்னைய பதிவை பார்க்க:இந்த இயங்குதளத்தில் செயலிகளை பயன்படுத்த நீங்கள் கட்டாயம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நிறுவ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாறாக நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்த APK Pure தளத்தின் மூலமாகவும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை தரவிறக்க முடியும். இது பற்றிய எமது முன்னைய பதிவை பார்க்க கீழுள்ள இணைப்பில் செல்க.அல்லது நாம் முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டது போன்று செயலிகளை Backup செய்து அவற்றை உங்கள் மைக்ரோ எஸ்.டி கார்டிற்கு இடுவதன் மூலம் இவற்றை இந்த இயங்குதளத்தில் நிருவுக்கொள்ளலாம். (செயலிகளை Backup செய்வது தொடர்பில் அறிய விரும்பினால் கீழுள்ள பதிவை பார்க்க)
முக்கிய குறிப்பு:

  • கணினியை Boot செய்வதற்கான சாளரத்தை பெரும் முறை கணினிகளுக்கு கணினி வேறுபடலாம். சில கணினிகளில் F2 விசையை அழுத்துவதன் மூலம் Boot சாளரத்தை பெறலாம், சில கணினிகளில் F10, F12 என இது கணினிகளுக்கு கணினி வேறுபடலாம். சில கணினிகளில் Boot செய்வதற்கு பொருத்தமான சாதனங்கள் இணைக்கப்பட்டவுடன் தானாகவே அதனை Boot செய்வதற்கான வசதி கிடைக்கும்.

  • உங்களுக்கு கணினி தொடர்பில் அவ்வளவு பரீட்சயம் இல்லையெனில் இதனை மேற்கொள்ள நாம் உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top