HI






உங்கள் ஸ்மார்ட் போனுக்கு அழகிய வால்பேப்பர் மற்றும் ரிங்டோன் போன்றவற்றை தரவிறக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?

ஸ்மார்ட் போன் வால்பேப்பர்


அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது ZEDGE எனும் இணையதளம். இதனை கணினியின் மூலம்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில் நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் இந்த தளத்துக்கு செல்கையில் வால்பேப்பர் மற்றும் ரிங்டோன் போன்றவற்றை தரவிறக்குவதற்கு என மிகவும் இலகுவானதும் எளிமையானதுமான இடைமுகத்தை கொண்டுள்ளது இந்த இணையதளம்.

தற்போதைய நவீன ஸ்மார்ட் போன்கள் மூலமாக மாத்திரமல்லாது சிம்பியன் இயங்குதளத்தை கொண்ட முன்னைய மொபைல் சாதனங்களுக்கு ஏற்றவாறான வால்பேப்பர், ரிங்டோன் மற்றும் தீம் (Theme) போன்றவற்றையும் இந்த தளம் தருகிறது.

வால்பேப்பர் ரிங்டோன்


இந்ததளத்தின் இணைய முகவரி http://www.zedge.net/ என்பதாகும். எனினும் நீங்கள் கணினி மூலம் இந்த தளத்திற்கு செல்பவர் எனின் https://webapp.zedge.net என்ற இணைப்பில் செல்வதன் மூலம் மேலும் எளிமையான இடைமுகத்தை பெற முடியும். 



நீங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக http://www.zedge.net/ எனும் இணையதளத்திற்கு சென்றால் அது தானாகவே https://webapp.zedge.net எனும் முகவரிக்கு மாற்றப்படும்.

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர் எனின் அவற்றுக்கு ஏற்றவாறான லைவ் வால்பேப்பர்களையும் (Live Wallpaper) இந்த தளம் தருகிறது.

அத்துடன் இதில் தரப்பட்டுள்ள வால்பேப்பர், ரிங்டோன் போன்றன அனைத்தும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் அவற்றுள் பிரபலமானவைகள், அண்மையில் இடப்பட்டவைகள், பரிந்துரைக்கப்படுபவைகள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அவைகள் தரப்பட்டுள்ளன.



தொடர்புடைய இடுகைகள்:



இந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் ரிங்டோன்களை நீங்கள் தரவிறக்க முன் இயக்கிப் பார்ப்பதற்கு வசதி தரப்பட்டுள்ளதுடன் அவைகள் பிடித்திருந்தால் மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.




மேலும் நீங்கள் ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது விண்டோஸ் போன் சாதனங்களை பயன்படுத்துபவர் எனின் இதற்கான செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி அதன் மூலம் உங்களுக்குத் தேவையான வால்பேப்பர், ரிங்டோன் போன்றவற்றை தரவிறக்கிக்கொள்ள முடியும்.



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top