நீங்களும் பியானோ கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவரா?


அப்படியாயின் உங்களுக்கு பெரிதும் துணை புரிகின்றது பியானு எனும் இணையதளம்.

பியானோ கற்க


இந்த இந்த இணையதளத்தை கணினி மூலமாக மட்டுமின்றி ஸ்மார்ட் போன்களின் ஊடாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


இந்த இணையதளத்தில் பிரபலமான பல பாடல்களுக்கான இசைகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பட்டியல் படுத்தித் தரப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு இசை அமைப்பதற்கான வழி முறைகளும் இதில் தரப்பட்டுள்ளன.

நீங்கள் கணினியின் மூலம் இந்த தளத்தை பயன்படுத்துபவர் எனின் உங்கள் இலத்திரனியல் பியானோவை கணனியுடன் இணைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதற்கு பதிலாக உங்கள் கணினியின் கீபோர்டையே பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.


பியானு இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?


பியானோ கற்க இணையதளம்

இந்த இணையதளத்தின் பிரதான இடைமுகத்தில் தோன்றும் Play a song என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் பியானோவை வாசிப்பதற்கான ஒரு பாடலை தெரிவு செய்துகொள்ள முடியும்.


பியானோ மொபைலில்


இனி உங்களுக்கு பியானோவை வாசிப்பதற்கான இடைமுகம் தோன்றும். நீங்கள் ஸ்மார்ட் போனின் மூலம் இந்த தளத்தை பயன்படுத்துபவர் இதில் தோன்றும் பட்டன்களை சாதாரணமாக தொடுவதன் மூலம் பயன்படுத்தலாம்.

நீங்கள் கணினியில் உள்ள கீபோர்டை பயன்படுத்தி இந்த தளத்தை பயன்படுத்துபவர் எனின் இந்த தளத்தின் இடது பக்கத்தில் இருக்கும் கீபோர்ட் குறியீட்டை சுட்டுவதன் மூலம் கீபோர்டின் எந்தெந்த விசைகளை அழுத்த வேண்டும் என்பதற்கான குறியீடுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையம் பியானோ


அத்துடன் இதில் Practice Mode, Performance Mode என இரு வேறு முறைகள் தரப்பட்டுள்ளன. இதில் Practice Mode என்பதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட பாடலுக்கான இசையை வாசிப்பதற்கு கற்றுக்கொள்ளலாம்.

Performance Mode என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட பாடலுக்கான இசையை இயக்கிப்பார்க்கலாம்.

இந்த தளத்தை பயன்படுத்தி நீங்கள் இசையை வாசிக்கும் போது நீங்கள் எந்தெந்த விசைகளை அழுத்த வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை மேலிருந்து கீழ் நோக்கி வரும் மஞ்சள் நிற கோடுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.மேலும் நீளமான கோடுகள் வரும் போது குறிப்பிட்ட விசையை சற்று நீண்ட நேரம் அழுத்த வேண்டும் என்பதுடன் சிறிய கட்டங்கள் வரும் போது குறிப்பிட்ட விசையை உடனடியாக அழுத்திய பின் அடுத்த விசைக்கு செல்ல வேண்டும்.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

1 comments:

 
Top