வாட்ஸ்அப் சேவையானது மிகவும் பிரபலமான ஒரு மெசேஜிங் சேவையாகும். அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களாலும் பயன்படுத்தப்பட்டுவரும் இது மாதாந்தம் 900 மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு சேவையாகும்.

இதனை 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் பெறுமதிக்கு வாங்கியது அனைவரும் அறிந்த விடயமே....!

இந்த சேவை இதுவரை கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய ஒரு சேவையாகவே இருந்துவந்தது . அதாவது இதனை நீங்கள் பயன்படுத்த துவங்கியது தொடக்கம் ஒரு வருடம் முடிவடையும் வரை வாட்ஸ்அப் சேவையை இலவசமாக பயன்படுத்த முடியும். பின்னர் ஒவ்வொரு வருடங்களுக்கும் நீங்கள் 0.99 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டும்.


எனினும் இந்த நிர்பந்தம் தளர்த்தப்பட்டு வாடாஸ்அப் சேவையை வாழ்நாள் முழுதும் இலவசமாகவே பயன்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முனிச் நகரில் இடம்பெற்ற மாநாட்டில் வாட்ஸ்அப் நிறுவுனர் ஜேன் கௌம் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

2 comments:

 
Top