ஒரு சந்தர்பத்தில் எட்டாக்கக்னியாக இருந்த இணையத்தை இன்று நினைத்த மாத்திரத்தில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாகியுள்ளது.

இலவச வை-பை


அந்த வகையில் கூகுள், பேஸ்புக், சாம்சுங், போன்ற பெரும் பெரும் நிறுவனங்கள் இணைய இணைப்பை முழு உலகுக்குமே வழங்குவதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.


இதன் பிரதிபலிப்பாக கூகுள் தனது முதல் இலவச வை-பை இணைப்பை மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இன்று (22-1-2016) அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. 


கூகுளின் வை-பை இணைப்பை பெரும் இந்தியாவின் முதல் இரயில் நிலையம் என்ற பெருமையை பெரும் இது. இங்கு வந்து செல்லக்கூடிய அனைத்து பயனர்களாலும் எவ்வித வரையறைகளும் இன்றி கூகுளின் இலவச வை-பை இணைய இணைப்பை அனுபவிக்க முடியும்.

டிஜிட்டல் இந்தியாகடந்த ஆண்டு இந்திய பிரதமரின் Silicon Valley விஜயத்தின் போதும் சுந்தர் பிச்சை அவர்களின் இந்திய விஜயத்தின் போதும் இது தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.

கூகுள் நிறுவனமும் இந்தியாவின் இரயில்டெல் கார்ப்பரேஷனும் இணைந்து இந்தியாவின் 407 இரயில் நிலையங்களுக்கு இது போன்ற சேவையை வழங்கவுள்ளன. 

இலவச வா-பை இந்தியாவின் 100 இரயில் நிலையங்கள்


அதேவளை கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அவர்களின் இந்திய விஜயத்தின் போது 2016 இன் முடிவில் இந்தியாவின் 100 இரயில் நிலையங்களில் கூகுளின் இலவச வை-பை சேவை கிடைக்கும் என்று உறுதி வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


எனவே சென்னை உட்பட ஏனைய இரயில் நிலையங்களுக்கும் இந்த சேவை மிக விரைவில் கிடைக்கப்பெறலாம் என்பதுடன் ப்ராஜெக்ட் லூன் திட்டத்தின் அடிப்படையில் இலங்கை முழுவதற்கும் கூகுளின் இணைய இணைப்பு வழங்கப்படும் நாளும் அவ்வளவு தூரமில்லை.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top