ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு என மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் செயலிகளின் வரிசையில் "மிமிகர்" (Mimicker Alarm) எனும் புதியதொரு அலாரம் செயலியையும் இணைத்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

ஆண்ட்ராய்டு அலாரம் செயலி


புதுமை விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது எமது அன்றாட காலை பொழுதை ஒரு புதிய உற்சாகத்துடன் துவங்கிக் கொள்ள உதவுகிறது.

இந்த செயலியில் நீங்கள் வைக்கக்கூடிய அலாரத்தை நிறுத்த வேண்டும் எனின் மிமிகர் செயலியால் இடப்படும் சுவாரஷ்யமான ஒரு கட்டளையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

உதாரணத்திற்கு இந்த செயலியில் வைக்கப்பட்டுள்ள அலாரத்தை நீங்கள் நிறுத்த முற்படும் போது.....உங்கள் முகம் சந்தோசமாக இருப்பது போன்ற ஒரு செல்பி புகைப்படத்தை பிடிக்குமாறு கட்டளையிடும் அவ்வாறு நீங்கள் பிடித்தால் அலாரம் நிறுத்தப்படும். இதன் போது உங்கள் முகம் சோகமானதாக இருந்தால் அலாரம் நிறுத்தப்பட மாட்டாது.


தொடர்புடைய இடுகை:


இதற்கு மாறாக உங்கள் முகம் சோகமானதாக இருப்பது போன்றோ அல்லது சாதாரணமாக இருப்பது போன்றோ  போல் செல்பி எடுக்குமாறும் கட்டளையிடப்படலாம். அவ்வாறான சந்தர்பங்களில் நீங்கள் அந்ததந்த உணர்சிகளை உங்கள் முகத்தில் ஏற்படுத்தத் தவறினால் அலாரம் நிறுத்தப்பட மாட்டாது.அதே போல் சில சந்தர்பங்களில் வெவ்வேறு நிறங்களை புகைப்படமாக பிடிக்குமாறு கட்டளையிடப்படலாம். 


உதாரணத்திற்கு மஞ்சள், நீளம், வெள்ளை போன்ற பல்வேறு நிறங்களை பிடிக்குமாறு கட்டளை இடும் இதன் போது குறிப்பிட்ட நிறங்களை கொண்ட ஏதாவது ஒன்றை நீங்கள் புகைப்படமாக பிடித்தால் அலாரம் நிறுத்தப்படும்.மேலும் சில சந்தர்பங்களில் ஒரு கரடு முரடான சொற்றொடரை உரத்த குரலில் வாசிக்குமாறு கட்டளையிடப்படும் அவ்வாறு அதனை நீங்கள் சரியாக உச்சரித்தால் அலாரம் நிறுத்தப்படும்.

அலாரத்தை நிறுத்துவதற்காக இந்த செயலியால் இடப்படும் ஒரு கட்டளையை உங்களால் நிறைவேற்ற முடியாத பட்சத்தில் Back பட்டனை அழுத்துவதன் மூலம் புதியதொரு கட்டளையை நிறைவேற்றலாம்.

இவ்வாறான ஒரு குரும்பை செய்தவாறே உங்கள் காலைப் பொழுதை அட்டகாசமாக துவக்கிக் கொள்ள உதவுகிறது இந்த செயலி.

நீங்களும் இதை பயன்படுத்திதான் பாருங்களேன்.

மிமிகர் அலாரம் ப்ளே ஸ்டோர் 

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top