"லெனோவோ வைப் எஸ் 1 லைட்" எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது லெனோவோ நிறுவனம்.

லெனோவோ ஸ்மார்ட் போன்


லாஸ் வேகஸ் நகரில் இடம்பெற்றுவரும் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சாதனங்களுள் இதுவும் ஒன்றாகும்.

குறைந்த விலையில் சிறந்த தெளிவுத்திறன் கொண்ட கேமராவை எதிர்பார்ப்பவர்களுக்கு "லெனோவோ வைப் எஸ் 1 லைட்" எனும் இந்த ஸ்மார்ட் போன் சிறந்த தெரிவாக அமையலாம்.


லெனோவோ வைப் எஸ் 1 லைட் விபரக் குறிப்புகள் 


சிறந்த செல்பி புகைப்படங்களை பிடிப்பதற்காக 8 மெகா பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட முன்பக்க கேமரா இதில் தரப்பட்டுள்ளதுடன் 13 மெகா பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா தரப்பட்டுள்ளது. மேலும் இரு பக்கங்களிலும் Led Flash வசதி தரப்பட்டுள்ளமையும் குறிபிடத்தக்கது.

இதில் 5 அங்குல Full HD திரை தரப்பட்டுள்ளதுடன். இது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

அத்துடன் 1.3 GHz வேகத்தில் இயங்கக் கூடிய ஆக்டா கோர் மீடியா டெக் MT6753 ப்ராசசர் மற்றும் 2 ஜிபி RAM போன்றவற்றுடன் 16 ஜிபி உள்ளக நினைவகமும் இதில் தரப்பட்டுள்ளது. இதன் நினைவகத்தை மேலும் அதிகரிக்க விரும்புபவர்கள் மைக்ரோ எஸ் டி கார்டை பயன்படுத்தி 32 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இதன் நிறை 129 கிராம் ஆகும் அதே நேரம் இதன் நீளம், அகலம், தடிப்பு முறையே 145, 71, 8.6  மில்லிமீட்டர்கள் ஆகும். 


இவைகள் தவிர இது  4 ஜி LTE வலையமைப்புகளுக்கும் ஆதரவளிப்பதுடன், வை-பை, ப்ளுடூத், GPS போன்ற பொதுவான வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளது.

இதன் விலை 199 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 13250 இந்திய ரூபாய்கள் ஆகும்.

Love to hear what you think!

1 comments:

 
Top