ஆரம்பத்தில் கணினி மூலம் நாம் நிறைவேற்றிய பல்வேறு கருமங்களை இன்று எமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கான சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.

பின்புல படத்தை மாற்றுதல்


ஒரு புகைப்படத்தில் இருக்கும் பின்புல காட்சிகளை நீக்கி அதற்கு நீங்கள் விரும்பும் ஒரு பின்புல தோற்றத்தை வழங்குவதற்கும் இன்றைய ஸ்மார்ட் போன்கள் சளைத்ததல்ல....

எனவே நீங்களும் உங்கள் புகைப்படத்தில் உள்ள பின்புல காட்சிகளை நீக்கி அதற்கு புதியதொரு தோற்றத்தை கொடுக்க விரும்பினால் தொடர்ந்து வாசியுங்கள்.


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான Background Eraser செயலியை பயன்படுத்தி ஒரு புகைப்படத்தில் இருக்கும் பின்புல காட்சியை எவ்வாறு நீக்கலாம் என்பதை நாம் எமது முன்னைய பதிவு மூலம் விரிவாக விளக்கியிருந்தோம். எனினும் நாம் அதனை இங்கு சற்று மேலோட்டமாக விளக்குகிறோம்.


முன்னைய பதிவை பார்க்க கீழுள்ள இணைப்பில் செல்க:

புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பகுதிகளை நீக்குவது எப்படி?

முதலில் Background Eraser எனும் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கிக் கொள்க. (தரவிரக்க இணைப்பு கீலே வழங்கப்பட்டுள்ளது.)

பின் அதனை திறந்து Load a photo என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் பின்புல காட்சியை நீக்க வேண்டிய புகைப்படத்தை தெரிவு செய்க.
பின்னர் தோன்றும் சாளரத்தில் குறிப்பிட்ட புகைப்படத்தின் நான்கு பக்கங்களிலும் இருக்கும் தேவையற்ற பகுதிகளை Crop செய்வதன் மூலம் நீக்கிய பின் வலது மேல் மூலையில் இருக்கும் Done என்பதை சுட்டுக.
இனி குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ள தேவையான பகுதியை மாத்திரம் வைத்துவிட்டு ஏனைய அனைத்து பகுதிகளையும் மிக துல்லியமாக நீக்கிக் கொள்வதற்கான அனைத்து டூல்களும் உங்களுக்கு தரப்படும்.இவற்றை பயன்படுத்துவது மிகவும் இலகு. இருப்பினும் இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்பினால் மேலே நாம் வழங்கியுள்ள பதிவை பார்க்க அவற்றில் முழுமையான விளக்கங்கள் உள்ளது.


தொடர்புடைய இடுகைகள்:


தேவையற்ற பகுதிகளை நீக்கிய புகைப்படத்துக்கு புதிய பின்புல காட்சியை இணைப்பது எப்படி?


Background Eraser செயலியின் மூலம் தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொண்ட புகைப்படங்களுக்கு புதியதொரு பின்புல காட்சியை இணைக்க வேண்டும் அல்லவா?


இதற்கு Photo Layers எனும் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கிக் கொள்க 

பின் அதனை திறந்து Load a background image என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு பின்புல காட்சியை தெரிவு செய்து கொள்க.

இனி தோன்றும் இடைமுகத்தில் அதை நீங்கள் விரும்பும் அளவில் Crop செய்து குறிப்பிட்ட சாளரத்தின் வலது மேல் மூலையில் தோன்றும் Done என்பதை சுட்டுக.பின்னர் உங்களுக்கு கிடைக்கும் இடைமுகத்தில் உள்ள Add Photo என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட பின்புல காட்சியில் இணைப்பதற்கு நீங்கள் Background Eraser செயலியை பயன்படுத்தி தேவையற்ற பகுதிகளை நீக்கி நீங்கள் கேலரியில் சேமித்த புகைப்படத்தை தெரிவு செய்க.அவ்வாறு நீங்கள் இணைத்த புகைப்படத்தின் இரு மூலைகளையும் தொட்டு உங்கள் விரல்களை நகர்த்துவதன் மூலம் அதன் அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதுடன் அதனை வெவ்வேறு கோணங்களுக்கு மாற்றியமைக்கவும் முடியும்.இறுதியாக Save என்பதை அழுத்த குறிப்பிட்ட புகைப்படம் கேலரியில் சேமிக்கப்படும். 

அவ்வளவுதான்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top