உள்ளங்கையில் அடங்கும் ஒரு கணினி என்று கூறும் அளவுக்கு இன்றைய ஸ்மார்ட் போன்களில் மிகவும் அற்புதமான வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளது.


கடுகதி வேகத்தில் தரவுகளை பரிமாற்ற


ஆரம்ப மொபைல் சாதனங்கள் போலல்லாது இன்று அறிமுகப்படுத்தப்படும் நவீன ஸ்மார்ட் போன்கள் மூலம் எச்.டி தரத்தில் அமைந்த திரைப்படங்களையே பார்க்க முடிவதுடன், அவற்றில் ஆயிரக்கணக்கான இசைகள் பாடல்கள் போன்றவற்றையும் சேமித்துக்கொள்ள முடிகிறது.


மேலும் நாம் இணையத்தை உலா வருகையில் தரவிறக்கும் கோப்புக்கள், மற்றும் எமது ஸ்மார்ட் போன் மூலம் நாம் பிடிக்கக்கூடிய புகைப்படங்கள் என ஏராளமான கோப்புக்கள் எமது ஸ்மார்ட் போனில் சேமிக்கப்பட்டு விடுகின்றன.

இவைகள் தவிர இன்னும் பல்வேறு வழிகளில் எமது ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படும் கோப்புக்களை எமது உறவினர்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம் அல்லவா?

இவ்வாறான சந்தர்பங்களில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது மொபைல் போன்களில் தரப்பட்டுள்ள ப்ளூடூத் வசதியையே ஆகும். 

எனினும் ப்ளூடூத் வசதியை விட பல மடங்கு வேகமாகவும் இலகுவகாவும் தரவுகளை பரிமாறிக்கொள்ள உதவுகிறது Xender எனும் செயலி.

உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் இசைகள், பாடல்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் மற்றும் உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகள் என எந்த ஒன்றையும் இந்த செயலியை பயன்படுத்தி Wi-Fi தொழில்நுட்பத்தின் ஊடாக மிக வேகமாக பரிமாறிக்கொள்ள முடியும்.

நீங்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனா, ஐபோன் சாதனங்களா, அல்லது விண்டோஸ் போன் சாதனமா என்பது இங்கு முக்கியமல்ல. 


இந்த செயலி உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருந்தால் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு, ஐபோனில் இருந்து விண்டோஸ் போனுக்கு என எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் எந்த ஒரு சாதனத்திற்கும் தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

இது ஸ்மார்ட் போன்களுக்கிடையில் மாத்திரமல்லாது ஸ்மார்ட் போனில் இருந்து கணினிகளுக்கும் மிக வேகமாக தரவுகளை பரிமாறிக்கொள்ள உதவுகிறது.


தொடர்புடைய இடுகை:


Xender செயலியை பயன்படுத்தி.....

ஸ்மார்ட் போனில் இருந்து ஸ்மார்ட் போனுக்கு தரவுகளை பரிமாறுவது எப்படி?

இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் இலகு.

1. இதனை பின்வரும் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்புக்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.

2. பின்னர் இரண்டு ஸ்மார்ட் போனிலும் Xender செயலியை திறந்துகொள்க.3. இனி நீங்கள் தரவுகளை எந்த ஸ்மார்ட் போனுக்கு அனுப்ப விரும்புகிறீர்களோ அதில் இருக்கும்  Xender செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள சிறிய அம்புக்குறி அடையாளத்தை சுட்டும் போது பெறப்படும் Receive எனும் பட்டனை அலுத்துக.

4. அதேபோல் நீங்கள் எந்த ஸ்மார்ட் போனில் இருந்து தரவுகளை அனுப்புகிறீர்களோ அதில் இருக்கும்  Xender செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள சிறிய அம்புக்குறி அடையாளத்தை சுட்டும் போது பெறப்படும் Send எனும் பட்டனை அலுத்துக.5. பின் Receive என அழுத்திய ஸ்மார்ட் போனில் மற்றைய ஸ்மார்ட் போனின் பெயர் தோன்றுவதை அவதானிக்கலாம். இனி அந்த பெயரை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட இரு சாதனங்களும் தொடர்புபடுத்தப்படும்.6. பிறகென்ன, உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், பாடல்கள் என Xender செயலியில் தோன்றும் எந்த ஒன்றையும் தெரிவு செய்வதன் மூலம் அவற்றை தொடர்பு படுத்தப்பட்ட ஸ்மார்ட் போனுக்கு கடுகதி வேகத்தில் அனுப்ப முடியும்.

ப்ளூடூத் இணைப்பை  விட பலமடங்கு வேகமாக தரவுகளை பரிமாறும் இதற்கு இணைய இணைப்புக்களோ அல்லது Data Cable களோ அவசியமில்லை என்பது இங்கு இனிப்பான விடயம்தானே..!

மேலும் இதன் மூலம் ஒரே நேரத்தில் வெவ்வேறுபட்ட நான்கு ஸ்மார்ட் போன்களை இணைத்து அவற்றுக்கு தரவுகளை பரிமாறிக்கொள்ளவும் முடியும். அத்துடன் இதன் செட்டிங்ஸ் பகுதியில் தரப்பட்டிருக்கும் Shake device to send எனும் வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனை அசைப்பதன் ஊடாகவே மற்றைய ஸ்மார்ட் போனுக்கு தரவுகளை அனுப்ப முடியும். 

இந்த செயலியில் தரப்பட்டுள்ள History எனும் பகுதி மூலம் நீங்கள் இது வரை எந்த அளவு தரவுகளை (MB, GB) பரிமாறி உள்ளீர்கள், எந்தெந்த தரவுகளை எந்தெந்த சாதனங்களுக்கு அனுப்பி உள்ளீர்கள்  எந்தெந்த சாதனங்களில் இருந்து எவ்வாறான தரவுகளை பெற்றுள்ளீர்கள் என்பன தொடர்பான அனைத்து தகவல்களையும் மீட்டிப் பார்க்கவும் முடியும்.

பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் இதனை நீங்களும் கொஞ்சம் பயன்படுத்தித்தான் பாருங்களேன்.

Xender செயலிதொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top