பேஸ்புக் தளமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் மிகப்பெரியதொரு சமூக வலைத்தளமாகும். இதனை கணினி மூலம் பயன்டுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்துபவர்களே இன்று அதிகம்.

ஆண்ட்ராய்டு பேஸ்புக்


அந்த வகையில் இன்று பேஸ்புக் செயலி நிறுவப்படாத ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றே கூற வேண்டும். அத்துடன் பெரும்பாலான மொபைல் சாதனங்களை புதிதாக வாங்கும் போதே அதில் பேஸ்புக் செயலி நிறுவப்பட்டிருக்கின்றன.

எது எப்படியோ சமூக வலைதளத்தில் பேஸ்புக் போல மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டு என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை வலம் வரும் பயனர்களே ஏராளம்.

எனவே நீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.


10. எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களில் பகிர்ந்து கொள்ள 

பொதுவாக பேஸ்புக் தளத்தில் எண்கள் எழுத்துக்கள் குறியீடுகளைக் கொண்டு எமது நிலைத் தகவல்களை பகிந்துகொள்ள முடிந்தாலும் நாம் அதில் தட்டச்சு எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களுக்கு மாற்ற முடிவதில்லை எனினும் Fsymbols எனும் இணையதளமானது நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை பல அட்டகாசமான தோற்றங்களுக்கு மாற்றித்தருகிறது. பின் அவற்றை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை சுற்று வட்டமிடப்பட்டதாகவும், தலைகீழாகவும், வலம் இருந்து இடமாகவும் என பல அருமையான தோற்றங்களுக்கு மாற்றிப்பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தளம் பற்றி முழுமையாக அறிய இந்த தளம் தொடர்பான எமது முன்னைய பதிவை பார்க்க:
9. நண்பர்களின் இற்றைபடுத்தல்களை அறிய பேஸ்புக் விட்ஜெட் வசதியை பயன்படுத்தலாமே 

ஆண்ட்ராய்டு பேஸ்புக் விட்ஜெட்


எமது ஸ்மார்ட் போனுக்கு நாம் செயலிகளை நிறுவும் போது பெரும்பாலான செயலிகள் அவற்றுக்கான விட்ஜெட்டை வசதியுடன் நிறுவப்படுகின்றன. இவற்றின் மூலம் குறிப்பிட்ட செயலியில் உள்ள வசதிகளை ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே மிக இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே போல் பேஸ்புக் செயலிக்கான விட்ஜெட் வசதியை உங்கள் ஸ்மார்ட் போனின் ஹோம் ஸ்க்ரீன் பகுதியில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே உங்கள் நண்பர்களின் இடுகைகளை கண்காணிக்கலாம்.

விட்ஜெட்டை இணைக்கும் முறையானது சாதனத்துக்கு சாதனம் வேறுபடலாம் இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் அதன் ஹோம் ஸ்க்ரீனை தொடர்ச்சியாக சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் விட்ஜெட்களை இணைப்பதற்கான வசதியை பெறலாம்.


8. நோட்டிபிகேஷகளை நிர்வகிக்க 

பேஸ்புக் தளத்தில் எமக்கு புதியதொரு செய்தி (Message) வரும் போதும், புதிய நண்பர்களின் கோரிக்கை வரும் போதும், புகைப்படங்களில் நாம் Tag செய்யப்படும் போதும் என இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் எமது பேஸ்புக் கணக்கில் நிகழும் பல்வேறு மாற்றங்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் செயலியில் நோட்டிபிகேஷன் வசதி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷன்


இது ஒரு சிறந்த வசதியாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான நோட்டிபிகேஷன்கள் வரும் போது அதுவே எமக்கு தொந்தரவாகவும் அமைந்துவிடுவதுண்டு.

எனவே எமது பேஸ்புக் கணக்கில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்களுக்கு மாத்திரம் நோட்டிபிகேஷன்கள் தோன்றும் வகையில் பேஸ்புக் செயலியை அமைத்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தோன்றும் மூன்று கோடுகளாலான மெனு பட்டனை சுட்டும் போது தோன்றும் App Settings ===> Notification எனும் பகுதி மூலம் மேற்குறிப்பிட்ட செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.


7. அருகிலுள்ள நண்பர்களையும் இடங்களையும் அறிய 

அத்துடன் கணினியின் மூலம் பெறமுடியாத ஆனால் ஸ்மார்ட் போன்கள் மூலம் பெற முடிகின்ற ஒரு வசதியே Nearby Places மற்றும் Nearby Friends என்பதாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் உங்களுக்கு அருகில் இருக்கும் விடுதிகள், உணவகங்கள், விற்பனை நிலையங்கள் போன்ற இன்னும் பல இடங்களையும் Nearby Friends என்பதன் மூலம் உங்களுக்கு அருகில் இருக்கும் உங்களது முகநூல் நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம்.பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Nearby Places மற்றும் Nearby Friends என்பவற்றை சுட்டுவதன் மூலம் மேற்குறிப்பிட்ட வசதிகளை பெறலாம்.


6. தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை தடுக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய வீடியோ கோப்புக்கள் தானாகவே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது பேஸ்புக் பக்கத்தில் தோன்றக்கூடிய அனைத்து வீடியோ கோப்புக்களும் தானாக இயங்குவதால் தேவையற்ற விதத்தில் எமது தரவுப்பாவனை அதிகரிக்கின்றது.எனவே இதனை தவிர்த்துக்கொள்ள Video Auto Play வசதியை நிறுத்திக் கொள்ளலாம். இதனை மேற்கொள்ள நாம் மேலே குறிப்பிட்ட வகையில் App Settings பகுதிக்கு சென்று அதில் தரப்பட்டிருக்கும் Auto Play என்பதை சுட்டுக. பின் Never Auto Play Video என்பதை தெரிவு செய்வதன் மூலம் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்குவதை தடுக்கலாம்.


5. பதிவுகளை சேமிக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்ப்பதற்காக அதனை சேமித்து வைக்க முடியும்.

இதனை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பதிவின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Save Video அல்லது Save Link எனும் பட்டனை சுட்டுவதன் மூலம் அவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக் கொள்ளும் வகையிலும் சேமித்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Saved என்பதை சுட்ட வேண்டும்.


தொடர்புடைய இடுகை:


4. வேண்டாமே கவலை:

உங்கள் பேஸ்புக் கணக்கை இன்னும் ஒருவர் உபயோகப்படுத்துவதாக உணர்கிறீர்களா? 

இதற்கு பெரும்பாலும் எமது கவனயீனமே ஒரு காரணமாக அமைந்துவிடலாம். நாம் பொது இடங்களில் இருக்கும் கணினிகளிலோ அல்லது நண்பர்களின் ஸ்மார்ட் போன்கள் மூலமாகவோ எமது முகநூல் கணக்கை பயன்படுத்தி விட்டு அதனை Logout செய்ய மறந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதுண்டு.

இருப்பினும் இதற்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Account settings ===> Security ===> Active Sessions எனும் பகுதி மூலம் நாம் Logout செய்ய மறந்த சாதனங்களில் இருந்து எமது பேஸ்புக் கணக்கை Logout செய்துகொள்ள முடியும்.

இது பற்றிய முழுமையான விளக்கங்களுக்கு எமது முன்னைய பதிவை பார்க்க:3. நண்பர் தான் ஆனால் பதிவுகள் வேண்டாம்:

முகநூலில் இருக்கும் நண்பர் ஒருவர் பகிரக்கூடிய தகவல்கள் உங்களுக்கு பிடிக்கவில்லைய? எனவே அவரது பதிவுகள் உங்களுக்கு தோன்றாமல் இருக்க அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு பதிலாக அவரை Unfollow செய்யலாம். இதன் போது அவர் தொடர்ச்சியாக எமது நண்பர் பட்டியலில் இருந்தாலும் அவர் பகிரக்கூடிய தகவல்கள் எமக்கு தோன்ற மாட்டாது.
இதனை மேற்கொள்ள குறிப்பிட்ட நண்பரின் சுயவிவர (Profile) பகுதிக்குச் சென்று Following என்பதை சுட்டுவதன் மூலம் Unfollow என்பதை தெரிவு செய்ய வேண்டியது தான்.


2. பதிவுகளை தவறாமல் பார்க்க வேண்டுமெனில்:

மேலே குறிப்பிட்ட முறைக்கு மாறாக ஒரு நண்பரின் அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளை தவறாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள்ள வேண்டுமெனில் குறிப்பிட்ட நண்பரின் அல்லது முகநூல் பக்கத்தின் Profile பகுதிக்கு சென்று  Following என்பதை சுட்டும்போது பெறப்படும் சாளரத்தில் See First என்பதை அழுத்த வேண்டும்.1. அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள:

நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை அரட்டைக்கான பகுதியில் (Chatting Window) Pin செய்துகொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் Pin செய்யும் நண்பர்களின் பெயர்கள் அரட்டைக்கான சாளரத்தின் மேற்பகுதியில் தோன்றும். 

எனவே அரட்டையில் ஈடுபடவேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும் உங்கள் நண்பர் பட்டியலில் இருந்து அவர்களை தேடிப்பெற வேண்டிய அவசியம் இருக்காது.பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள நண்பர்களை அடையாளப்படுத்தும் குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் நண்பர்களின் பட்டியலை பெறலாம்.

பின் அதில் தரப்பட்டுள்ள EDIT என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள முடியும் 


தொழில்நுட்ப சொற்கள்:
  • அரட்டை: Chatting
  • முகநூல்: Facebook
  • நிலைத் தகவல்: Status Update
  • இற்றைபடுத்தல்: Update


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top