தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியால் இன்று உலகம்  ஒரு கிராமம் போல் மாறிவிட்டது. இதில் முக்கிய பங்களிப்பு இணையத்துக்கே உரியது என்றால் அதனை மறுப்பதற்கு இல்லை.
இன்றைய உலகில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மிகவும் அவசியமான தேவைகளுள் ஒன்றாகிவிட்ட இணையத்தை  இன்று யாராலும் புறக்கணிக்க முடியாது.

இன்றைய இணையத்தில் ஒவ்வொரு தனி நபரையும் ஒன்றிணைத்து ஒருவருக்கொருவர் தத்தமது எண்ணங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான சாத்தியத்தை பேஸ்புக், கூகுள் பிளஸ், மற்றும் வைபர், வாட்ஸ்அப் போன்ற சமூக சேவைகள் உருவாக்கியுள்ளன.

இருப்பினும் ஒருவருடைய மனதில் எழும் எண்ணங்களை கருத்துக்களாக கோர்த்து அதனை இன்னுமொருவருக்கு  தெரிவிக்க "மொழி" என்பது ஒரு தடையாகவே அமைந்துள்ளது.

எனினும் இந்த குறைபாட்டையும் இன்றைய தொழில்நுட்ப உலகம் ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

இதற்கென கூகுள் தரும் மொழிபெயர்ப்பு சேவையோ மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை https://translate.google.com எனும் இணையதளத்தின் ஊடாக நேரடியாக பயன்படுத்திக்கொள்ள முடிவதுடன் இந்த சேவையை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்திக் கொள்வதற்கான செயலியும் தரப்பட்டுள்ளது.

இருப்பினும் பொருள் அறிய முடியாத  ஒரு சொல்லை கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தி நாம் பொருளறிய வேண்டும் எனின் நாம் https://translate.google.com எனும் இணையப்பக்கத்திற்கு சென்றாக வேண்டும் அல்லது எமது ஸ்மார்ட் போனில் தரப்பட்டிருக்கும் செயலியை திறந்து குறிப்பிட்ட சொல்லை உள்ளிட வேண்டும்.

வேகமாக இயங்கும் இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் இது சற்று சிரமமான காரியமாகவே அமைவதுண்டு.


தொடர்புடைய இடுகை:

உடனுக்குடன் பொருளறிய உதவும் Easy Copy செயலி 


எனவே எம்மால் பொருளறிய முடியாத ஒரு சொல்லை எமது ஸ்மார்ட் போன் மூலம் உடனுக்குடன் பொருளறிந்து கொள்ள உதவுகிறது Easy Copy எனும் செயலி.

நீங்கள் இணையத்தில் தேடிப்பெற்ற ஒரு தகவல் வேற்று மொழியில் அமைந்திருப்பதால் அதன் பொருளை உங்களால் அறிய முடியாத சந்தர்பத்திலோ அல்லது வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக், ஸ்கைப் மூலம் வந்த ஒரு தகவலின் பொருளை உங்களால் அறிய முடியாத சந்தர்பத்திலோ குறிப்பிட்ட சொற்களை Copy செய்வதன் மூலம் அவற்றை கூகுள் மொழிபெயர்ப்பு சேவை மூலம் உடனுக்குடன் உங்களுக்கு தெரிந்த மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும். (இதனை கீழுள்ள வீடியோ இணைப்பு மூலம் காணலாம்)


இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி? • இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து எமது ஸ்மார்ட் போனுக்கு இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியும்.

 • பின் குறிப்பிட்ட செயலியை திறந்து வலது மேல் மூலையில் தரப்பட்டிருக்கும் மெனு பட்டன் மூலமாக அதன் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்க.


 • பின் அதில் தரப்பட்டுள்ள Action Setting ===> Translation என்பதை சுட்டுக.


 • பின் Source language என்பதில் Auto என்பதையும் Target language என்பதில் தமிழ் மொழியையும் தெரிவு செய்க.

அவ்வளவுதான்.
இனி நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் எழுத்துக்களை வசனங்களை Copy செய்யும் ஒவ்வொரு தடவையும் இந்த செயலியின் சாளரம் தோன்றும்.

பின்னர் அதில் உள்ள Translate என்பதை சுட்டும் போது அதற்கான மொழிபெயர்ப்பை உங்களுக்கு தெரிந்த மொழியில் பெற்றுக்கொள்ளலாம்.

இது மாத்திரம் அல்லாமல் இன்னும் பல்வேறு வசதிகளையும் இந்த செயலி மூலம் பெற முடிகின்றது. அதாவது ஒரு கிளிப்போர்ட் மேனேஜர்  போன்றும் இது தொழிற்படுகிறது. நீங்கள் Copy செய்யும் ஒவ்வொரு சொற்களையும் இதன் மூலம் மீள பெற்றுக்கொள்ள முடியம்.


அத்துடன் நீங்கள் Copy செய்யும் சொற்களுக்கான கூகுளின் தேடல் முடிவை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளவும், அவற்றை மின்னஞ்சல் செய்யவும், அவற்றை ஏனைய செயலிகள் மூலம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

குறிப்பு:
இதற்கு நீங்கள் Google Translate செயலியையும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் நிறுவியிருக்க வேண்டும்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

3 comments:

 1. வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ காப்பி செய்யும் பொது பாப்-அப் சாளரம் ஏதும் தோன்றவில்லை செட்டிங்க்ஸில் பிளாக் லிஸ்டிலும் டிக் செய்யப்படவில்லை. காரணம் தெரியவில்லை.விளக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில வேலை உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் Task Killer செயலியால் Easy Copy செயலி முடக்கப்பட்டிருக்கலாம்.

   எனவே Easy Copy செயலியை மீண்டும் இயக்கிக் கொள்ளுங்கள்.

   Task Killer செயலிகளை பயன்படுத்துபவர் எனின் அதன் White List பகுதியில் Easy Copy செயலியை இணைத்து விடுங்கள்.

   நீக்கு

 
Top