எமக்கு ஸ்மார்ட் போனுக்கு அழைப்புக்களோ, குருஞ்செய்திகளோ வராவிட்டாலும் கூட எமது சட்டைப்பையில் இருக்கும் ஸ்மார்ட் போனை அடிக்கொரு தடவை எடுத்துப் பார்க்கவே சொல்கின்றன இன்றைய ஸ்மார்ட் போன்கள்.

பின்புலப்படம்


ஆகவே நாம் அடிக்கடி எடுத்து தொட்டுப்பார்க்கும் எமது ஸ்மார்ட் போனுக்கு நாம் ஏன் அழகிய பின்புலபடங்களை இட்டு அதனை அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது?

எனவே நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்றவாறான அழகிய புகைப்படங்களை தரவிறக்கிக் கொள்ள உதவுகிறது Mobileswall எனும் இணையதளம்.

இதனை கணினிகள் மூலம் மட்டுமல்லாது உங்கள் கையிலிருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலமும் அணுக முடியும்.


Mobileswall


உங்களுக்கு எவ்வைகையான பின்புலப்படங்கள் பிடிக்குமோ அவ்வகையான பின்புலப்படங்களை மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொன்றும் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.


Mobileswall இணையம்


உதாரணத்திற்கு இந்த தளத்தில் மிருகங்கள், பறவைகள், இடங்கள், ஓவியங்கள், விளையாட்டுக்கள், இயற்கை காட்சிகள் என வெவ்வேறு தலைப்புக்களின் கீழ் ஒவ்வொரு புகைப்படமும் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.


தொடர்புடைய இடுகை:


மேலும் உங்கள் ஸ்மார்ட் போனின் திரையின் அளவுக்கு ஏற்றவாறான Resolution இல் அமைந்த புகைப்படங்களை மாத்திரம் தேடிப்பெற்றுக் கொள்வதற்கான வசதியும் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளது.


நீங்களும் ஒரு தடவை விஜயம் செய்துதான் பாருங்களேன்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top