வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றமையை அவதானிக்க முடிகிறது.

வாட்ஸ்அப் seen வசதியை முடக்க


அந்தவகையில் நீங்களும் வாட்ஸ்அப் சேவையை விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒருவரா?


பொதுவாக வாட்ஸ்அப் மூலம் நாம் ஒருவருக்கு ஏதாவதொன்றை  அனுப்பிய பின் அது அவரை சென்றடைந்ததை அறிந்து கொள்வதற்காக ஒரு குறியீடும், அதனை அவர் படித்துவிட்டார் என்பதை அறிந்துகொள்வதற்காக இன்னுமொரு குறியீடும் என வெவ்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மறுபக்கம் பார்க்கையில் எமக்கு வந்த ஒரு செய்தியை நாம் படிக்கும் போது அது படிக்கப்பட்டது என்பதற்கான அறிவுறுத்தலை குறிப்பிட்ட செய்தியை அனுப்பியவரால் அறிந்துகொள்ள முடியும்.

இருப்பினும் பல்வேறு காரணங்கள் கருதி உங்களுக்கு வந்த செய்தியை நீங்கள் படித்து விட்டதாக அனுப்பியவர் அறிந்துகொள்வதை நீங்கள் விரும்பவில்லையா?

இதனை முடக்கிக் கொள்வதற்கான வசதி வட்ஸ்அப் செயலியிலேயே தரப்பட்டுள்ளது.

நீங்கள் இதனை மேற்கொள்ள விரும்பினால்.

1. முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்து கொள்ளுங்கள்.

2. பின்னர் அதன் Settings ===> Account ===> Privacy எனும் பகுதிக்கு செல்க.

3. இனி குறிப்பிட்ட பக்கத்தில் Read Receipts எனும் வசதி தரப்பட்டிருக்கும்.4. பின் அதில் இருக்கும் Tick அடையாளத்தை எடுத்துவிடுக.

அவ்வளவுதான்.

இனி உங்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியை நீங்கள் படித்ததாக அதனை அனுப்பியவரால் எவ்விதத்திலும் அறிந்துகொள்ள முடியாது.

இதன் மறுபக்கம் பார்க்கையில் நீங்கள் அனுப்பிய செய்தியை ஒருவர் படித்துவிட்டார் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் உங்களால் பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


தொடர்புடைய இடுகைகள்:


இல்லை, இல்லை....

அவர்கள் வாட்ஸ்அப் செய்தியை படித்தார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும் ஆனால் நாம் படித்ததாக அவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது. இதற்கு என்ன வழி என்று கேட்கிறீர்களா?


இதற்கும் ஒரு குறுக்கு வழி உள்ளது. இதனை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைய பின்பற்றுக:

1. உங்களுக்கு வாட்ஸ்அப் தகவல் கிடைத்ததன் பின் அதனை உடனடியாக திறந்து விட வேண்டாம். மாறாக உங்கள் ஸ்மார்ட் போனை Airplane Mode இற்கு மாற்றிக்கொள்க.2. பின்னர் குறிப்பிட்ட வாட்ஸ்அப் தகவலை படிக்கலாம்.

3. இனி வாட்ஸ்அப் செயலியில் இருந்து வெளியேறி உங்கள் ஸ்மார்ட் போனின் Settings ===> General ===> Application Manager எனும் பகுதிக்கு சென்று அதில் வாட்ஸ்அப் செயலியை பெருக.4. பின் அதனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Force Stop என்பதை சுட்டிய பின் நீங்கள் ஏற்கனவே செயற்படுத்திய Airplane Mode என்பதை முடக்கிவிடுக.

அவ்வளவுதான். இனி வாட்ஸ்அப் செயலியை நீங்கள் மீண்டும் துவக்கும் வரை குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படித்ததாக அனுப்பியவரால் அறிய முடியாது.


தொடர்புடைய இடுகைகள்:

Love to hear what you think!

4 comments:

 1. Thanks for the information. However, the option 'last seen' is for reporting when is the last time you have accessed the WhatsApp & whether you are online or not. For disabling delivery/read reports one has to use the option 'Read receipts'.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி நண்பரே....
   பதிவை புதுப்பித்துவிட்டோம்... :)

   நீக்கு

 
Top