கூல்பேட் எனும் சீன நிறுவனம் "நோட் 3 லைட்" (Note 3 Lite) எனும் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நோட் 3 லைட் (Note 3 Lite) ஸ்மார்ட் போன்


ஃபிங்கர் பிரிண்ட் வசதி மற்றும் 3 ஜிபி RAM போன்றவற்றுடன் வெறும் 6,999 இந்திய ரூபாவுக்கு இது அறிமுகப்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை கொண்டியங்கும் இது 5 அங்குல HD திரையை கொண்டுள்ளது. இதற்கு ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மேம்படுத்தலை வழங்க இருப்பதாக கூல்பேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் 1.3GHz வேகத்தில் இயங்கும் 64 பிட் மீடியாடெக் MT6735 வகையிலமைந்த குவாட் கோர் ப்ராசசருடன் 16 ஜிபி உள்ளக நினைவகமும் இதில் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி நினைவகத்தை பயன்படுத்தி இதன் நினைவகத்தை மேலும் 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இதில் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன் 13 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய  பிரதான கேமரா தரப்பட்டுள்ளது.

அத்துடன் 4 ஜி வலையமைப்புகளுக்கும் ஆதரவளிக்கக்கூடிய இது டூயல் சிம் வசதியையும் கொண்டுள்ளது.


இதனை ஜனவரி 28 ஆம் திகதி முதல் Amazon இணையதளத்தின் மூலம் கொள்வனவு செய்யலாம்.Love to hear what you think!

1 comments:

 
Top