கணினியிலும் சரி, ஸ்மார்ட் போன்களிலும் சரி இன்று அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு இணைய உலாவி என்றால் அது "கூகுள் குரோம்" என்றே கூற வேண்டும்.

கூகுள் குரோம் இணைய உலாவி


கூகுளின் படைப்புக்களில் சிறந்ததொரு படைப்பான இது இணையத்தை வேகமாமாக வலம் வருவதற்கு பெயர் போன ஒரு இணைய உலாவியாகும்.

கூகுள் குரோம் இணைய உலாவியின் அடுத்த அவதாரம் "ப்ரோட்லி"

இதன் வேகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் "ப்ரோட்லி" எனும் தொழில்நுட்பத்தை அதன் இணைய உலாவியில் சேர்க்க உள்ளது கூகுள் நிறுவனம்.

இந்த "ப்ரோட்லி" எனும் தொழில்நுட்பமானது நாம் தற்போது பயன்படுத்தி வரும் இணைய உலாவியில் உள்ள "சொப்லி" (Zopfli) எனும் தொழில்நுட்பத்தை விட வேகமாக இணையப் பக்கங்களை உலாவருவதற்கு துணை புரியக்கூடியதாகும்.

இது இணையப் பக்கங்களை வேகமாக உலா வருவதற்கு உதவுவது மாத்திரமின்றி எமது தரவுப்பாவனையை 25% வீதம் வரை குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் நாம் இணையத்துக்காக செலவிடும் ஒரு தொகை பணம் எமது சட்டைப்பையில் சேமிக்கப்படும் என்றும் கூறலாம்.


இவற்றுடன் "ப்ரோட்லி" தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட இணைய உலாவியை நீங்கள் பயன்படுத்தும் போது அது இயங்குவதற்கு உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து குறைந்தளவு சக்தியையே பெற்றுக்கொள்ளும் இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரியின் சக்தியையும் சேமித்துக் கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • இணைய உலாவி - Web Browser


எனவே மூன்று வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட "சொப்லி" (Zopfli) தொழில்நுட்பத்தில் இருந்து "ப்ரோட்லி" எனும் புதிய தொழில்நுட்பத்திற்கு காலடி எடுத்து வைக்க நீங்கள் தயாரா?


குறிப்பு:

  • "ப்ரோட்லி" தொழில்நுட்பத்தின் பயன்களை ஸ்மார்ட் போன் மூலம் இணையத்தை பயன்படுத்துபர்களுக்கே உணர முடியும்.
  • இருப்பினும் இந்த வசதியை "Chrome Canary" எனும் சோதனை பதிப்பில் chrome://flags#enable-brotli என தட்டச்சு செய்து brotli எனும் வசதியை செயற்படுத்துவதன் மூலம் இந்த வசதியை உங்கள் ஸ்மார்ட் போனில் செயற்படுத்தி பார்க்கலாம் என்றாலும் நாம் அதனை உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை. ("Chrome Canary" பதிப்பு சோதனை பதிப்பு என்பதால் அதனை பயன்படுத்தும் போது பல்வேறு தடைகள் ஏற்படலாம்)

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top