இணையத்தின் மூலம் ஏராளமான பயன்களை பெற முடிந்தாலும் அவ்வப்போது எரிச்சலூட்டும் சில நிகழ்வுகளும் இடம்பெறவே செய்கின்றன.அண்மையில் கூகுள் குரோம் இணைய உலாவியை திக்குமுக்காட வைக்கும் 16 எழுத்துக்களை கொண்ட ஒரு நிரல் பற்றி நாம் உங்களுக்கு அறியத்தந்திருந்தோம்.ஆனால் தற்பொழுது சமூக வலைதளங்களின் ஊடாக பரவி வரும் இந்த இணைய இணைப்புக்களோ உங்கள் ஸ்மார்ட் போனையே கதிகலங்க வைக்கக்கூடியதாகும். நீங்கள் கணினியில் இருந்தவாறு இந்த தளத்திற்குச் சென்றால் உங்கள் கணினியும் நிலைகுலைந்துவிடும்.

crashsafari.com மற்றும் crashchrome.com ஆகிய இணைய இணைப்புக்களே அவைகளாகும்.
உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி நீங்கள் இந்த தளத்திற்கு சென்றால் crashsafari.com என ஆரம்பித்து crashsafari.com/0 பின் /01, /012, 0123, 01234 என தொடர்ச்சியாகவும் மிகவேகமாகவும் புதுப்புது தாவல்கள் உருவாக்கப்படுகின்றன இதன் காரணமாக சிறுது நேரத்திலேயே உங்கள் ஸ்மார்ட் போனின் RAM நினைவகம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு இறுதியில் ஸ்மார்ட் போனின் நிலை கவலைக்கிடமாகிறது.


இருப்பினும் கவலைப்பட வேண்டியதில்லை இதனால் உங்கள் ஸ்மார்ட் போனிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் இவ்வாறான சந்தர்பங்களில் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் தானாகவே மீள இயங்கும் (Restart) இல்லையெனில் அதனை நீங்களாகவே மீள இயங்கச் செய்வதன் மூலம் சரி செய்துவிடலாம்.

இதனை வேடிக்கைக்காகவும் விளையாட்டுக்காகவும் சிலர்கள் சமூக வலைதளங்களின் ஊடாக பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் நீங்கள் அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்...!இந்த இணைப்பு  crashsafari.com அல்லது crashchrome.com என நேரடியாக தோன்றாமல் goo.gl/AnQsm1 அல்லது tinyurl.com/orjuf5h போன்று சுருக்கப்பட்ட இணைப்பாகவும் தோன்றலாம். இது போன்ற சந்தர்பங்களில் http://wheredoesthislinkgo.com/ எனும் தளத்தில் அந்த சுருக்கப்பட்ட இணைப்பை உள்ளிடுவதன் மூலம் அதன் உண்மையான முகவரியை அறியலாம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top