கணினிகளுக்கான அடோபி போட்டோஷாப் மென்பொருள் மூலம் எமது கற்பனைக்கு எட்டிய விதத்திலெல்லாம் புகைப்படங்களை செதுக்கிக் கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு ஐபோன் அடோபி போட்டோஷாப் மிக்ஸ்


கணினிகளுக்கான அடோபி போட்டோஷாப் மென்பொருளில் தரப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் ஸ்மார்ட் போன்களுக்கான செயலியில் பெற முடியாவிட்டாலும் அதில் உள்ள சில பிரதான வசதிகளை இதில் பெற முடியும்.


ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான அடோபி போட்டோஷாப் மிக்ஸ் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் இதனை AppStore மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம். (இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன) பின் அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இலவச கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.

பின்னர் இந்த செயலி மூலம் உங்கள் புகைப்படத்தை எடிட்டிங் செய்வதற்கென பின்வரும் வசதிகளை பெறலாம்.


லேயர் வசதி: (Layer)இந்த செயலியின் மேற்பகுதியில் தரப்பட்டுள்ள லேயர் பகுதியின் மூலம் ஒரே நேரத்தில் இருவேறு புகைப்படங்களை திறந்து நிர்வகிக்கலாம்.


Zoom In/Out

மேலும் நீங்கள் திறந்திருக்கும் புகைப்படத்தின் மேல்  உங்களின் இரு விரல்களை வைத்து நகர்த்துவதன் மூலம் அதனை உருப்பெருக்கிக் கொள்ளவும் அதனை சிறிதாக்கிக் கொள்ளவும் முடிவதுடன் அதனை வெவ்வேறு கோணங்களுக்கு நகர்திக் கொள்ளவும் முடியும்.

இந்த செயலியின் வலது கீழ் மூலையில் தரபட்டிருக்கும் "ப்ளஸ்" குறியீட்டை கொண்ட பட்டனை சுட்டுவதன் மூலம் புதியதொரு புகைப்படத்தை பிடித்துக் கொள்ளவோ அல்லது கேலரியில் இருக்கும் ஒரு புகைப்படத்தை திறந்து கொள்ளவோ முடியும்.


எமது விருப்பத்திற்கு ஏற்றார்போல் புகைப்படத்தின் தோற்றத்தை மாற்ற  மேலும் இதில் தரப்பட்டிருக்கும் Adjust என்பதை என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் திறந்த புகைப்படத்தில் இருக்கும் வர்ணக் குறைபாடுகளை தானாகவே நிவர்த்தி செய்து கொள்ள முடிவதுடன் (Auto Fix), குறிப்பிட்ட புகைப்படத்தின் Brightness, Contrast, Expose, Saturation போன்றவற்றை மாற்றியமைப்பதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.புகைப்படத்தின் தோற்றத்தை உடனுக்குடன் மாற்றியமைக்க:அதே போல் இதில் தரப்பட்டிருக்கும் Looks எனும் பகுதி மூலம் உங்கள் புகைப்படத்தின் தோற்றத்தை வெவ்வேறு வர்ணங்களுக்கும் தோற்றங்களுக்கும் உடனுக்குடன் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். அத்துடன் Looks எனும் பகுதியில் தரப்பட்டுள்ள ஒரு தோற்றத்தை உங்கள் புகைப்படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மாத்திரம் வழங்கவும் முடியும். இதனை மேற்கொள்ள வேண்டும் எனின் Looks பகுதியில் இருக்கும் ஒரு தோற்றத்தை தெரிவு செய்த பின் உங்கள் புகைப்படத்தில் குறிப்பிட்ட தோற்றத்தை வழங்க வேண்டிய இடத்தை தொடுதல் வேண்டும்.


புகைப்படத்தின் தேவையற்ற பகுதியை நீக்குதல்:


மேலும் இதில் தரப்பட்டுள்ள Cut எனும் பகுதி மூலம் உங்கள் புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்ள முடியும். இவ்வாறன சந்தர்ப்பங்களில் புகைப்படத்தில் இருக்கும் ஒரு பகுதியை துல்லியமாக தெரிவு செய்து நீக்கிக் கொள்வதற்காக Basic Selection மற்றும் Smart Selection என இரு வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.


தொடர்புடைய இடுகைகள்:
Basic Selection மற்றும் Smart Selection என்றால் என்ன?இதில் தரப்பட்டுள்ள Basic Selection என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட புகைப்படத்தில் தெரிவு செய்யும் இடம் மாத்திரம் நீக்கப்படும் Smart Selection என்பதை தெரிவு செய்தால் நீங்கள் தெரிவு செய்யும் இடத்தில் இருக்கும் நிறத்தின் அடிப்படையில் தேவையற்ற பகுதிகள் நீக்கப்படும்.


மேலதிகமாக நீக்கப்பட்ட இடத்தை சரிசெய்வதற்கு:

புகைப்படத்தில் இருக்கும் ஒரு பகுதியை நீங்கள் நீக்கும் போது நீங்கள் நினைத்ததை விடவும் அதிகமாக ஒரு பகுதி நீக்கப்பட்டுவிட்டால் இதில் தரப்பட்டிருக்கும் Add எனும் பகுதி மூலம் அதனை மீண்டும் தோன்றச்செய்ய முடியும். அல்லது Undo வசதியையும் பயன்படுத்தலாம்.


மேற்கொள்ளும் மாற்றங்களை மிருதுவானதாக அமைத்துக் கொள்ள:அத்துடன் உங்கள் புகைப்படத்தில் உள்ள ஒரு பகுதியின் தோற்றத்தை Looks எனும் பகுதி மூலம் மாற்றியமைக்கும் போதோ அல்லது தேவையற்ற பகுதியை நீக்கும் போதோ  இதில் தரப்பட்டிருக்கும் Feather எனும் வசதியை தெரிவு செய்வதன் மூலம் மிருதுவான தன்மையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.புகைப்படத்தை உங்களுக்கு தேவையான அளவுகளுக்கு மாற்றியமைத்தல்:

இவைகள் தவிர இதில் தரப்பட்டிருக்கும் Crop பகுதி மூலம் புகைப்படத்தை உங்களுக்கு தேவையான அளவுகளுக்கு மாற்றியமைக்க முடியும்.இறுதியாக இந்த செயலியின் மேற்பகுதியில் தரப்பட்டுள்ள Share பட்டனை சுட்டுவதன் மூலம் பெறப்படும் சாளரத்தில் Save To Gallery என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் புகைப்படத்தை கேலரியில் சேமித்துக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு இந்த செயலியை பயன்படுத்தி மேலே படத்தில் உள்ளவாறு ஒரு புகைப்படத்தை உருவாக்கிய விதம்.

தொடர்புடைய இடுகைகள்:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top