வரலாறு காணாத வகையில் சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை
காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றமை நாம் நன்கறிந்த விடயமாகும்.

இலவச மொபைல் அழைப்புக்கள்


இங்கு தொலைதொடர்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருக்கக்கூடிய பலரும் சென்னையில் இருக்கக்கூடிய தமது சொந்தங்களை தொடர்பு கொள்வதில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஸ்கைப் மூலமாக இலவச சர்வதேச மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புக்கள்.


இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு சில தினங்களுக்கு இலவச மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புக்களை மேற்கொள்ள வசதிகளை வழங்கியுள்ளது ஸ்கைப் நிறுவனம்.

இது தொடர்பில் ஸ்கைப் நிறுவனம் அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

தலைப்பு: தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு இலவச சர்வதேச அழைப்பு சேவை. தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் – தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை வரும் சில தினங்களுக்கு கட்டணமற்ற* இலவச சேவையாக உடனடியாக அமுல்படுத்துகிறோம். கனமழையின் பாதிப்பு முற்றும் தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில், அயல்நாட்டில் இருப்பவர்கள், தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மாற்று தொலைதொடர்பு உதவியினை வழங்குகிறோம்.ஸ்கைப் சேவையை கணினி ஊடாகவும் இணையத்தின் ஊடாகவும் பயன்படுத்த முடயுமான அதேவேளை ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய ஸ்மார்ட் போன்கள் ஊடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அறிந்து கொள்ள முன்னர் பேஸ்புக் நிறுவனம்  "சேஃப்டி செக்" (Safety check)  எனும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்த அதேவேளை பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஒரு இணையப்பக்கத்தையும் உருவாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top