இயற்கை அனர்த்தங்களின் போதும், அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும் போதும் குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள தமது பேஸ்புக் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஏனையவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் பாதுகாப்பாக இருக்கின்றார்களா? என்பதை அறிந்து கொள்ள பேஸ்புக் தரும் "சேஃப்டி செக்" (Safety check) எனும் வசதி பெரிதும் துணை புரிகின்றது.

பேஸ்புக் சேப்ட்டி செக்


அந்தவகையில் அண்மையில் பாரிஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின், நேபாளில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போதும் இன்னும் பல் வேறு சந்தர்பங்களிலும் தமது பேஸ்புக்  நண்பர்கள், உறவினர்களின் பாதுகாப்பை அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் தளத்தில் "சேஃப்டி செக்" (Safety check) எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.


தற்பொழுது, சென்னையில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்தத்தினால் சென்னையில் இருக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள சென்னை நகருக்கான "சேஃப்டி செக்" (Safety check)" வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது பேஸ்புக் நிறுவனம்.

சேஃப்டி செக்" (Safety check)" வசதியை பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் இருப்பவர் எனின்...


முதலில் நீங்கள் இந்த இணைப்பில் இருக்கும் சேஃப்டி செக் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.



பின்னர் தோன்றும் சாளரத்தில் "நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளீர்களா?" என்பதற்குக் கீழ் இருக்கும் "ஆம், என் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்." என்பதை க்ளிக் செய்ய வேண்டும். 

பேஸ்புக் தளத்தை ஆங்கிலத்தில் பயன்படுத்துபவர் எனின் இது இவ்வாறு அமையும்: (Are you in the affected area? Yes, let my friends know.)




இதன் மூலம் நீங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தலாம்.

நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பவர் எனின்...

முதலில் நீங்கள் இந்த இணைப்பில் இருக்கும் சேஃப்டி செக் பக்கத்திற்கு  செல்க 

இனி மேற்குறிப்பிட்ட முறையில் "ஆம், என் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்." என்பதை சுட்டுக.



பின்னர் தோன்றும் சாளரத்தில் நான் பாதுகாப்பாக உள்ளேன் என்பதை க்ளிக் செய்க.

இதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? என்பதை அறிய விரும்பும் உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்த முடியும்.

இது தவிர உங்கள் நண்பர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை ஏனையவர்களுக்கு அறிந்துகொள்ள அவர்களது பெயருக்கு நேராக இருக்கும் "பாதுகாப்பு என குறி" (Mark Safe) என்பதை க்ளிக் செய்யலாம்.


மேலும் நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள் என குறிப்பிட்டிருந்தால் "சேஃப்டி செக்" (Safety check) பக்கத்தின் மூலம் உங்கள் கருத்துக்களையும் ஏனையவர்களுடன் பகிந்து கொள்ளலாம்.

இந்தியாவுக்கு "சேஃப்டி செக்" (Safety check)" வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Love to hear what you think!

2 comments:

 
Top