தமிழ்இன்போடெக் தளத்திற்கு 2015 ஆம் ஆண்டு எப்படி அமைந்தது?

2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு Tamilinfotech எனும் எமது இணையதளத்துக்கு சிறந்த ஒரு ஆண்டாகவே அமைந்தது.

Tamilinfotech


இருப்பினும் பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் என்னால் பதிவுகளை எழுத முடியவில்லை.
பின்னர் 2015 ஜூலை மாதம் தொடக்கம் பதிவுகளை எழுத நேரம் எனக்கு இடமளித்தது, இதனை தொடர்ந்து எமது தளத்துக்கு வருகை தரும் ஒவ்வொரு வாசகரும் ஏதாவது பயனை பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் பயனுள்ள தகவல்களையும் எழுதத் துவங்கினேன்.இதன் பிரதி பலனாக எமது Tamilinfotech தளம் பல மில்லியன் பக்கப்பார்வைகளை எட்டியது மட்டுமின்றி வாசகர்களின் சிறந்த பின்னூட்டங்களும் எமக்கு கிடைத்தன இதுவே என்னை மேலும் மேலும் பதிவுகளை எழுதத் தூண்டியது.

இவ்வருடம் எழுதிய பதிவுகளில் மிகவும் பிரபலமான பதிவுகள் 


இந்த வருடம் நான் எழுதிய பதிவுகளில் வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் (Gallery) தோன்றாமல் மறைப்பது எப்படி? எனும் பதிவு கிட்டத்தட்ட 40000 பக்கப்பார்வைகளை பெற்றது. 

அதேவேளை "எந்த ஒரு மொபைல் சாதனத்தையும் Hard Reset செய்வது எப்படி? கற்றுத்தரும் ஒரு அருமையான இணையதளம்." எனும் பதிவும் வாசகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது.

Tamilinfotech கருத்துக்கள்


மேலும் "Sun TV, KTV, Raj TV உட்பட ஏராளமான தமிழ் தொலைக்காட்சி சேனல்களை Android சாதனம் மூலமாக பார்க்க முடியும்" எனும் இந்த பதிவு 50,000 இற்கும் மேற்பட்ட பக்கப்பார்வைகளை பெற்றதுடன் வாசகர்களின் சிறந்த பின்னூட்டங்களையும் பெற்றது. இருப்பினும் நான் இந்த பதிவில் அறிமுகப்படுத்திய MHDtv எனும் செயலி அண்மையில் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய ஒரு செயலியாக மாற்றப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமே..!

Tamilinfotech முகநூல்


இவைகள் தவிர அண்மையில் எழுதிய பதிவுகளில் "மொபைல் சாதனங்களில் அழைப்பவரை அறிந்துகொள்ள உதவும் ட்ரூ காலர் செயலி" பற்றிய பதிவு ஏராளமான வாசகர்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட ஒரு சில எதிர்மறையான கருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது" 

"அதாவது குறிப்பிட்ட செயலி பொய்யானது அவ்வாறு அழைப்பவர்களின் பெயரை அறிய முடியாது என சிலர் குறிப்பிட்டிருந்தனர்." எனினும் இந்த கூற்று தவறானது. குறிப்பிட்ட செயலி அழைப்பவரின் பெயரை அறிந்து கொள்ள எவ்வாறான உத்தியை கொண்டுள்ளது என்பதை நான் குறிப்பிட்ட பதிவில் தெளிவு படுத்தியிருந்தேன். நான் கூட இதனை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றேன். பயன்படுத்துபவர்களுக்கு இதன் உண்மை தன்மை புரிந்திருக்கும்.

அத்துடன் கூகுள் இவ்வருடம் அறிமுகப்படுத்திய செயலிகளுள் கூகுள் இன்டிக் டூல்ஸ் எனும் செயலி மிகவும் அருமையானது. இது தமிழ் மொழியை பயன்படுத்தக்கூடிய   அனைவருக்கும் மிகவும் பயனளிக்கக்கூடியதாக அமைந்திருந்தது. நாம் இதனை "கூகுள் இன்புட் டூல்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் தமிழ் மொழியை மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம்" எனும் பதிவு மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதிகமான பதிவுகள் ஸ்மார்ட் போன் தொடர்பில் அமைந்திருப்பதற்கு காரணம் என்ன?

நாம் அறிமுகப்படுத்திய பதிவுகளில் அதிகமானவைகள் ஸ்மார்ட் போன் தொடர்பான பதிவுகளே அதிக வரவேற்பை பெற்றுள்ளன இதன் மூலம் ஸ்மார்ட் போன் ஊடாக இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடிகிறது எனவே வாசகர்களுக்கு பொருத்தமான பதிவுகளை வழங்கும் பொருட்டு  நாம் ஸ்மார்ட் போன்கள் தொடர்பான பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.எதிர்கால பதிவுகள் எப்படி இருக்கும்?

இலட்சங்களை தாண்டி மில்லியன்களில் காலடி எடுத்து வைத்த ஆண்டு என்றால் அது எமக்கு 2015 ஆம் ஆண்டாகும். எனினும் 2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் சிறந்த பதிவுகளை எழுதுவதற்கும், தொழிநுட்ப செய்திகளை உடனுக்குடன் உங்கள் கண்முன் கொண்டுவருவதன் மூலம் மில்லியனை தாண்டி பில்லியனில் காலடி எடுத்து வைக்கும் பயணத்தை துவங்க எண்ணியுள்ளேன். இதற்கு சமூக வலைதளங்களின் ஊடான உங்கள் முழு ஆதரவையும் நான் எதிர்பார்கிறேன்.

இறுதியான கருத்து

இறைவனின் கிருபையாலும் வாசகர்களின் ஆதரவாலும் இதுவரை வெற்றிப்பாதையில் பயணித்து வந்த நாம் இதன் பிறகும் இதே பாதையில் பயணிக்க உங்களது தொடர்ச்சியான ஆதரவை வேண்டுகின்றோம்.

உங்கள் எண்ணங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Love to hear what you think!

1 comments:

 
Top