ஸ்மார்ட் போன்களில் பேட்டரியை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்வதென்பது வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவதை போன்ற ஒரு செயலாக அமைந்து விட்டது.

ஐபோன் பேட்டரி

ஐபோன்களுக்கான  ஸ்மார்ட் பேட்டரி கேஸ்


எனவே நீண்ட நேரம் பேட்டரியின் சக்தியை தக்க வைத்துக் கொள்வதற்காக "ஸ்மார்ட் பேட்டரி கேஸ்" எனும் கேஸ் கவரை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பில் நிறுவனம்.



ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் ஸ்மார்ட் போன்களுக்கு என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பேட்டரி கேஸ் 99 அமெரிக்க டொலர்களாக விலை குறிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட ஸ்மார்ட் போனை மேலும் 25 மணித்தியாலங்களுக்கு நீடித்து இயங்கச் செய்ய முடியும், 4 ஜி  LTE வலையமைப்பின் ஊடாக மேலும் 18 மணித்தியாலங்களுக்கு இணையத்தை பயன்படுத்த முடியும் அல்லது மேலும் 20 மணித்தியாலங்களுக்கு வீடியோ கோப்புக்களை பார்க்க முடியும்.


அத்துடன் நீங்கள் ஐபோனை மின்னேற்றும் அதே சமயம் ஸ்மார்ட் பேட்டரி கேஸில் இருக்கும் பேட்டரியையும் மின்னேற்றிக்கொள்ள முடியும்.

மேலும் ஸ்மார்ட் பேட்டரி கேஸ் கவரில் எந்த அளவு மின் சேமிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஐபோனின் லாக் ஸ்க்ரீன் (Lock screen) அல்லது நோடிபிகேஷன் (Notification) பகுதி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Sources: Apple

தொடர்புடைய இடுகைகள்:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top