ஒவ்வொரு தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இணையமானது இன்று இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.


இணைய கணக்குகளை நீக்குவது எப்படி?


அந்தவகையில் நாம் இணையத்தின் மூலம் பல்வேறு தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வெவ்வேறு தளங்களில் எமகென்ற கணக்குகளை உருவாக்கியிருப்போம் அல்லவா?இருப்பினும் பல்வேறு சந்தர்பங்களில் ஒரு இணையதளத்தில் உருவாக்கிய கணக்குகளை நீக்குவதற்கான தேவை ஏற்படலாம்.

உதாரணத்திற்கு: 
  • குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை நாம் பயன்படுத்தாமல் கைவிடும்போது.
  • குறிப்பிட்ட தளத்தில் தேவையற்ற மின்னஞ்சல்கள் வந்து குவியும் போது.
  • முன்னைய கணக்கை நீக்கி விட்டு புதிய கணக்கை உருவாக்க விரும்பும் போது.


இது போன்ற இன்னும் பல சந்தர்பங்களில் இணையத்தில் நாம் உருவாக்கிய கணக்குகளை நீக்கிக்கொள்ள நேரிடலாம்.

எனினும் நாம் உருவாக்கிய கணக்குகளை நீக்குவது தளத்திற்கு தளம் வேறுபடுகின்றது.

எனவே நாம் எமது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி வெவ்வேறு இணைய தளங்களில் உருவாக்கிய கணக்குகளை எவ்வாறு நீக்க வேண்டும் என எமக்கு வழிகாட்டுகின்றது ஜஸ்ட்டிலீட் மீ எனும் இணையதளம்.இந்த தளத்தில் கூகுள், பேஸ்புக், யாஹு, ஸ்கைப் போன்ற தளங்கள் உட்பட இன்னும் ஏராளமான தளங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.


தொடர்புடைய இடுகை:


இதில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு தளத்திலும் உருவாக்கப்பட்ட கணக்குகளை நீக்குவது சுலபமா, நீக்குவது கடினமா? அல்லது அவற்றை நீக்கவே முடியாதா? என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ளும்வகையில் வெவ்வேறு நிறங்களில் அது அடையாளப்படுத்தியும் தரப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் ஜஸ்ட்டிலீட் மீ எனும் தளத்தில் நீங்கள் தேடும் ஒரு தளத்தை மிக இலகுவாக தேடிப்பெற்றுக் கொள்ளும் வகையில் இதில் A தொடக்கம் Z வரை இணையதளங்கள் வரிசைபடுத்தியும் தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர வெவ்வேறு இணையதளங்களில் தற்காலிகமாக கணக்குகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனின் இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Fake Identity Generator எனும் பகுதி மூலம் தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பெயர், முகவரி, யூசர் நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றை பெற்றுக்கொள்ளவும் முடியும்.


நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் இங்கே சுட்டுக


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top