அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் வசிக்கும் பல இலட்சக்கணக்கான மக்கள் எண்ணில்லாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றமை நாம் அறிந்த விடயமாகும்.அந்த வகையில் இந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனம் "சேஃப்டி செக்" (Safety check) எனும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.அதேபோல் கூகுள் நிறுவனமும் குறிப்பிட்ட பிரதேச மக்களின் பாதுகாப்புக்கும் உதவிக்கும் பல தகவல்களை பின்வரும் பக்கத்தில் தொகுத்து வழங்கி உள்ளது.மேற்குறிப்பிட்ட பக்கத்தில் தரப்பட்டுள்ள Emergency helpline numbers என்பதன் மூலம் குறிப்பிட்ட பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு அனர்த்தங்களையும் உரியோரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அவசர தொலைபேசி இலக்கங்கள் தரப்பட்டுள்ளன

  • இதன் படி மின் அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 1912 எனும் அவசர இலக்கத்திற்கு அழைப்புக்களை ஏற்படுத்தலாம்.
  • மரம் வீழ்தல் மற்றும் நீர் உட்புகுதல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 1913 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.

  • தீ அனர்த்தங்களுக்கு 101 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்

  • அளவுக்கு அதிகமான கழிவு நீரினால் ஏற்படும் இடையூறுகளுக்கு 45674567,2200335 எனும் இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம்.


அதேபோல் உங்கள் பிரதேசத்திற்கான அவசர தெலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை பின்வரும் இணையப்பக்கத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.


மேலும் போக்குவரத்துக்காக சென்னையில் எந்தெந்த பாதைகளை பயன்படுத்த முடியும் எந்த பாதைகளில் அதிக போக்குவரத்து நெரிசல்கள் இடம்பெறுகின்றன எந்தெந்த பாதைகள் வெள்ளாத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து வரைபடத்தையும் கூகுள் நிறுவனம் மேற்குறிப்பிட்ட பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இவைகள் தவிர உங்கள் தொலைபேசிக்கான  இலவச மீள் நிரப்பல்கள் இலவசமாக உங்கள் மேட்டார் வாகனங்களை திருத்திக் கொள்வதற்கான சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு பின்வரும் இணைப்பில் செல்க.


மேற்குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் கூகுளால் Google.org எனும் பக்கத்தில் திரட்டப்பட்டவைகள் ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top