கூகுள் மொழிபெயர்ப்பு சேவை 

கூகுள் தரும் சேவைகளில் அதன் மொழிபெயர்ப்பு சேவையானது அனைவருக்கும் மிகவும் பயன்தரக்கூடிய ஒரு சேவையாகும்.

கூகுள் மொழிபெயர்ப்பு ஸ்மார்ட் போன்


உலகில் பேசப்படும் மொழிகளுள் கிட்டத்தட்ட 90 மொழிகளை இதன் மூலம் மொளிபெயர்துக் கொள்ள முடியும். இதில் இந்தியாவில் பேசப்படும் 22 உத்தியோகபூர்வ மொழிகளில் 9 மொழிகளை கூகுள் மொழிபெயர்ப்பு சேவையின் மூலம் மொழிபெயர்த்துக் கொள்ள முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் கூகுள் மொழிபெயர்ப்பு சேவையின் மூலம் சில சொற்களை மொழிபெயர்க்கும் போது சில சந்தர்பங்களில் குறிப்பிட்ட சொற்களுக்கு நேரடியான அர்த்தங்களை வழங்கும் சந்தர்பங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அதன் கருத்து வேறு ஒன்றாக அமைந்திருக்கும்.

எனவே இதில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மிகவும் தரமான சேவையை பயனர்களுக்கு வழங்குவதற்காக புதியதொரு செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளது கூகுள்.


பின்வரும் மொழிகளில் அமைந்த சொற்களை அல்லது சொற்றொடர்களை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்க முடியுமானால் உங்களுக்கும் இந்த செயற்திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும்.

  •  தமிழ்
  • இந்தி
  • பெங்காலி
  • தெலுங்கு
  • மராத்தி
  • குஜராத்தி
  • கன்னடம்
  • மலையாளம்
  • பஞ்சாபி
கூகுள் மொழிபெயர்ப்புடிசம்பர் 16 தொடக்கம் டிசம்பர் 30 வரை சரியான கருத்துக்களை கொண்டு அதிக பங்களிப்பு செய்த 50 நபர்களுக்கு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போனை வெற்றிபெற  முடியும் எனவும் கூகுள் நிறுவனம் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. (இந்தியர்களுக்கு)

நீங்களும் இதில் இணைந்துகொள்ள விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணையப்பக்கத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்ட பின் அதே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் மொழிபெயர்ப்பு சேவைக்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.


துரதிஷ்டவசமாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போனை வெற்றிபெற முடியாது போனாலும்  தாய்மொழிக்கு பங்களிப்பு செய்தோம் என்ற திருப்தியாவது இருக்குமல்லவா?

இருப்பினும் வெற்றிபெற வாழ்த்துகிறோம் கீழுள்ள இணைப்பின் மூலம் உங்கள் பங்களிப்பையும் செலுத்தலாம்.

குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்ல இங்கே சுட்டுக.

Love to hear what you think!

1 comments:

 
Top