குறிப்பிட்ட ஒருவருக்கு நீங்கள் அனுப்பும் செய்தியை ஒரு தடவை மாத்திரம் படிக்கும் வகையில் அனுப்ப வேண்டுமா?

படித்தவுடன் கிழிக்கப்படும்


Privnote இணையதளம்

அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Privnote எனும் இணையதளம். இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாகக்கூடிய தகவல்கள் பெறப்படுபவரால் படிக்கப்பட்ட உடன் உடனடியாக நீக்கப்பட்டுவிடும். குறிப்பிட்ட நபரால் அதே செய்தியை மீண்டும் படிக்க முடியாது.
அது மாத்திரம் இன்றி நீங்கள் உருவாக்கும் தகவல்கள் ஒரு மணித்தியாலத்துக்குப் பின், 24 மணித்தியாலங்களுக்குப் பின், ஒரு வாரத்திற்குப் பின் அல்லது ஒரு மாதத்திற்குப் பின் தானாகவே நீங்கும் படி உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

இவைகள் தவிர நீங்கள் பகிரும் தகவல்களுக்கு கடவுச்சொல் ஒன்றை இட்டு அனுப்பவும் முடியும். இதன் போது குறிப்பிட்ட செய்தியை பெரும் நபர் நீங்கள் அவருக்கு வழங்கும் கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமே அவரால் குறிப்பிட்ட செய்தியை பார்க்கக்கூடியதாக இருக்கும்.

மேலும் இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கி அனுப்பிய தகவல்கள் தானாக நீக்கப்பட்ட பின் அவைகள் நீக்கப்பட்டமைக்கான செய்தியை அறிந்துகொள்ளும் வகையில் ஒரு மின்னஞ்சலை பெற்றுக்கொள்வதற்கான வசதியும் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளது.


Privnote இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?


Privnote எனும் இந்த இணையதளத்தை ஸ்மார்ட் போன்களின் ஊடாகவும் அணுக முடிவதுடன் இதனை எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.


Privnote இணையம்


இந்த தளத்தின் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் பகிர வேண்டிய தகவலை தட்டச்சு செய்த பின் Create Note என்பதை சுட்ட வேண்டும். இதன் போது பெறப்படும் இணைப்பை உங்கள் நண்பர்களுடனோ அல்லது ஏனையவர்களுடனோ பகிர்ந்து கொள்ளலாம்.


தானாக அழியக்கூடிய செய்தி


Create Note என்பதற்கு அருகில் இருக்கும் Show Option என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் உருவாக்கும் தகவல் நீக்கப்பட வேண்டிய கால எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவும் குறிப்பிட்ட தகவலுக்கு கடவுச்சொல் ஒன்றை இட்டுக் கொள்ளவும் முடியும்.

பெறப்படுபவரால் படிக்கப்படும் போது


தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், வணிக ரீதியிலான தகவல் ஒன்றை சக ஊழியர் ஒருவருடன் பகிர்ந்துகொள்ளவும், நண்பர்களுக்கு ஆச்சரியமூட்டவும் என பல்வேறு நோக்கங்களில் Privnote எனும் இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.


நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்...தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top