கணினிகளுக்கான இயங்குதளங்களுள் விண்டோஸ் இயங்குதளமும் ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளங்களுள் ஆண்ட்ராய்டு இயங்குதளமும் மிகச்சிறந்த இயங்குதளங்கள் ஆகும்.எனினும் எமக்குத் தேவையான பல்வேறு கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள இவற்றுக்கு என தனித்தனியே மென்பொருள்களும் செயலிகளும் உள்ளன.


எனவே விண்டோஸ் கணினியில் பயன்படுத்தும் ஒரு மென்பொருளை ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலோ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்தும் ஒரு செயலியை விண்டோஸ் இயங்குதளத்திலோ சாதாரணமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது.


ப்ளூஸ்டாக் மூலம் ஆண்ட்ராய்டு செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தலாம்.

இருப்பினும் ப்ளூஸ்டாக் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் நாம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நிறுவும் செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பல மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்த ஒரு செயலியையும் உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.

கணினியை பயன்படுத்தும் எந்த ஒருவராலும் இந்த மென்பொருளை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ப்ளூஸ்டாக் மென்பொருளை கணினியில் நிறுவுவது எப்படி?


ப்ளூஸ்டாக் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிய பின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து கொள்க.இனி அதன் பிரதான இடைமுகத்தில் வெவ்வேறுபட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் தரப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவ விரும்பினால் அவற்றை சுட்டும்போது தோன்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இடைமுகத்தில் Install என்பதை சுட்ட வேண்டும். இனி குறிப்பிட்ட செயலியை ப்ளூஸ்டாக் மூலமாக உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.(கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்க உங்கள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தல் வேண்டும்.)

மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் தோன்றும் Search Button மூலம் எந்த ஒரு செயலியையும் தேடிப்பெற்று அதனை நிறுவிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் இடது புறத்தில் தரப்பட்டிருக்கும் பகுதியில் APK என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் கணினிக்கு தரவிறக்கப்பட்ட APK கோப்புக்களை ப்ளூஸ்டாக் மென்பொருளில் நிறுவிக்கொள்ளவும் முடியும். (இதன் போது ஜிமெயில் கணக்கை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை) கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து APK கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ள APK புவர் தளத்தை பயன்படுத்தலாம்.


குறிப்பு:
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்த உங்கள் கணினியில் ஆகக் குறைந்தது 2ஜிபி RAM இருக்க வேண்டும். 4ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட அளவு RAM இருத்தல் சிறந்தது.
  • கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்க உங்கள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தல் வேண்டும்.
  • இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு 295 MB அளவை கொண்டதாகும்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top