ஒரு பாடலுக்கு இசையை அல்லது ஒரு பாடலுடன் இன்னுமொரு பாடலை ஒன்றாக இணைத்து அதனை ரீமிக்ஸ் பாடலாக மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா?

மொபைலில் பாடல்களை ரீமிக்ஸ் செய்ய


ரீமிக்ஸ் செய்ய உதவுகிறது djay செயலி 

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது djay எனும் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.

அட்டகாசமான இடைமுகத்தை கொண்ட இதன் இடைமுகத்தை கண்டவுடன் பயந்துவிடாதீர்கள். இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு என்பதுடன் பல அருமையான ஒலி விளைவுகளை (Sound Effects) உங்கள் பாடலுக்கு சேர்த்துக் கொள்ள  முடியும்.

இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் செங்குத்தாகவும் கிடையாகவும் உங்கள் வசதிக்கு ஏற்றாட் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் ரீமிக்ஸ் செய்ய


இதனை நீங்கள் பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் இரண்டு பாடல்களை ரீமிக்ஸ் செய்வதற்கான இருவேறு இடைமுகங்கள் தரப்பட்டுள்ளன.

உங்கள் ஸ்மார்ட் போனை கிடையாக வைத்து நீங்கள் இந்த செயலியை பயன்படுத்துபவர் எனின் இரண்டு சாளரங்களையும் ஒரே இடைமுகத்தில் பார்க்கலாம்.

சாளரம் - Window
இடைமுகம் - Interface
செயலி -Application

ரீமிக்ஸ் செயலி


அல்லது நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை செங்குத்தாக வைத்து பயன்படுத்துபவர் எனின் இருவேறு சாளரங்களையும் தனித்தனி இடைமுகங்களில் பார்ப்பதற்கான வசதி தரப்பட்டுள்ளது.


இதில் செயலியில் தரப்பட்டுள்ள, இசையை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பாடல்களை இந்த செயலிக்கு உள்ளிட்டுக்கொள்ளலாம்.

டீஜே அப்ளிகேஷன்


இனி குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ள பல்வேறு ஒலி விளைவுகளை பயன்படுத்தியும் ஒரு பாடலுடன் இன்னுமொரு பாடலை இணைத்தும் அட்டகாசமானதொரு புதிய ரீமிக்ஸ் பாடலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

நீங்கள் உருவாக்கும் ரீமிக்ஸ் பாடலை உருவாக்கும் போது அதனை பதிவு செய்து கொள்ள இந்த செயலியில் தரப்பட்டுள்ள சிவப்பு நிற ரெகார்ட் பட்டனை அழுத்த வேண்டும்.

இதன் இலவச பதிப்பில் உங்கள் விருப்பம் போல் பாடல்களுக்கு ஒலி விளைவுகளை ஏற்படுத்தி ரீமிக்ஸ் செய்துகொள்ள முடியும் எனினும் இதன் கட்டணம் செலுத்தி பெறப்படும் பதிப்பில் தானாகவே ரீமிக்ஸ் செய்யும் வசதிகள் உட்பட இன்னும் பல வசதிகளும் தரப்பட்டுள்ளன.


2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயலிகளுள் ஒன்றாக இந்த செயலியும் கூகுள் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top