மோட்டோ ஜி டர்போ எனும் ஸ்மார்ட் போனை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்பட்த்தியுள்ளது.

மோட்டோ ஜி டர்போ


14,499 இந்திய ரூபாய்களுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள இதில் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் தரப்பட்டுள்ளன.

மோட்டோ ஜி டர்போ விபரக்குறிப்புகள் 


இது ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் அதேவேளை 1.5 GHz வேகத்தில் இயங்கக்கூடிய ஆக்டா கோர் ப்ராசசர் மற்றும் 2 ஜிபி RAM போன்றவற்றை கொண்டுள்ளது.

தூசு மற்றும் நீர் உட்புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இது IP67 எனும் சான்று படுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றின் மூலம் அறியப்படுவது யாதெனில் உங்கள் ஸ்மார்ட் போன் 1 மீட்டர் ஆழமான நீரில் 30 நிமிடங்கள் வரை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்பதாகும்.


தொடர்புடைய இடுகை:


வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளவும் செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கும் ஏற்ற வகையில் 5 மெகாபிக்சல் கேமரா இதில் தரப்பட்டுள்ளதுடன் 13 மெகா பிக்சல் தெளிவுத்திறனுடைய பிரதான கேமரா தரப்பட்டுள்ளது.

16 ஜிபி உள்ளக நினைவகத்தை இது கொண்டுள்ளது. நினைவகத்தை மேலும் அதிகரிக்க விரும்புபவர்கள் மைக்ரோ எஸ்.டி கார்டை பயன்படுத்தி 32 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

5 அங்குல திரை, 155 கிராம் எடை, 72.4 மில்லிமீட்டர் நீளம் 142.1 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 11.6 மில்லிமீட்டர் தடிப்பு போன்ற வடிவமைப்பை இது கொண்டுள்ளது.


இவற்றுடன் 15 நிமிடங்களுக்கு மின்னேற்றுவதன் மூலம் 6 மணித்தியாலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் மிக வேகமாக மின்னேற்றும் தொழில்நுட்பம் இதில் தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர வை-பை, 4 ஜி வலையமைப்புகளுக்கான ஆதரவு டூயல் சிம் வசதி போன்றவைகளும் இதில் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கும் ப்ளிப்கார்ட் தளம் மூலம் கொள்வனவு செய்வதற்கும் கீழுள்ள இணைப்பில் செல்க.

Love to hear what you think!

1 comments:

 
Top