மைக்ரோசாப்ட் லூமியா 550 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம் 

லூமியா 550


இது விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அதே நேரம் மலிவு விலையிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.இதில் மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸெல், பவர் பாய்ண்ட், அவுட்லுக், ஒன் டிரைவ் இணையச் சேமிப்பு வசதி, ஸ்கைப், மற்றும் கோர்டனா போன்றவற்றுக்கான செயலிகள் நிறுவப்பட்டுள்ளது.

4.7 அங்குல திரையை கொண்டுள்ள இது குவால்காம்  ஸ்னாப்ட்ராகன் ப்ராசசரை கொண்டு இயங்குகிறது.

மேலும் 2 மெகா பிக்சல் தெளிவுத் திறனில் அமைந்த முன்பக்க கேமரா மற்றும் ப்ளாஷ் வசதியுடன் கூடிய 5 மெகா பிக்சல் பிரதான கேமரா போன்றவற்றையும் இது கொண்டுள்ளது.


அத்துடன் 1 ஜிபி RAM மற்றும் 8 GB உள்ளக நினைவகம் போன்றவற்றை கொண்டுள்ள இதன் நினைவகத்தை மைக்ரோ எஸ்.டி கார்டை பயன்படுத்தி 200 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

136.1 மில்லிமீட்டர் நீளம் 67.8 மில்லிமீட்டர் அகலம் 9.9 மில்லிமீட்டர் தடிப்பு மற்றும் 141.9 எடை  போன்ற வடிவமைப்பை கொண்டுள்ள இது 4 ஜி வலையமைப்புகளுக்கும் ஆதரவளிக்கக்கூடியதாகும்.

இதன் விலை 139 அமெரிக்க டொலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது இது கிட்டத்தட்ட 9250 இந்திய ரூபாய்கள் ஆகும்.
தற்பொழுது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது எதிர்வரும் வாரங்களில் இந்திய உட்பட உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top