3 ஜிபி Ram மற்றும் 4ஜி வலையமைப்புக்கான ஆதரவு போன்றவற்றுடன் X10 எனும் புதியதொரு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது லாவா நிறுவனம்.

ஸ்மார்ட் போன்


5 அங்குல HD IPS திரையை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை கொண்டு இயங்குகிறது இதற்கான மார்ஷ்மல்லோ பதிப்பு வெளியிடப்படும் என லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது 64 பிட் குவாட் கோர் ப்ராசசரை இது கொண்டுள்ளதுடன் 16 ஜிபி உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டை பயன்படுத்தி இதன் நினைவகத்தை மேலும் 32 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள  முடியும்.

இவற்றுடன் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கும் ஏற்றவாறான 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா தரப்படுள்ளதுடன் 13 மெகாபிக்சல் தெளிவுத்திறன் உடைய பிரதான கேமராவும் தரப்பட்டுள்ளது.இவைகள் தவிர 2900 mAh வலுவுடைய பேட்டரி இதில் தரப்பட்டுள்ளதுடன் டூயல் சிம், வை-பை, ப்ளுடூத் போன்றவற்றுக்கான வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளது.

கருப்பு, வெள்ளை நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலை 11,500 இந்திய ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது.

Love to hear what you think!

1 comments:

 
Top